பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.400 வது இதழ் ஸ்பெஷல்

இண்டெக்ஸ் :

இந்திய சந்தைகள் மார்ச் மாதத்தின் முடிவில் நன்றாக விலை ஏறியே முடிந்திருக்கிறது. அதோடு அடுத்த நிதி ஆண்டின் முதல் நாளான ஏப்ரல் 01-ம் தேதி சற்று இறக்கத்தில்தான் நிறைவடைந்திருக்கிறது.

அடுத்த வாரம் ஏப்ரல் 5, 2016 செவ்வாய்க்கிழமை அன்று நடக்க இருக்கும் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி யின் கொள்கை முடிவுகளைத் தான் இந்திய சந்தைகளும், முதலீட்டாளர்களும், டிரேடர்களும் கவனித்து வருகிறார்கள். 

நடக்க இருக்கும் கூட்டத்தில் 0.25% வட்டியைக் குறைத்தால், சந்தையில் என்ன விளைவு  ஏற்பட வேண்டுமோ, அது  நடந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கூட ஆர்பிஐ, வட்டி விகிதத்தை  குறைக்கும் என்று டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அதிகப்படியான எதிர்பார்ப்பு சென்டிமென்ட் பொய்த்துப் போனால், இந்திய சந்தைகளில் சில வலுவான அதிர்வலைகள் ஏற்படும்.

பிப்ரவரி 29-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலான பின்பு மட்டும் 1000 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி அதிகரித்திருக்கிறது.

டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், ஆர்பிஐ கூட்டத்துக்குப் பிறகு  புதிய பொசிஷன்களை எடுக்க காத்திருக்கிறார்கள். எனவே, வரும் திங்கட்கிழமை எந்த பெரிய மாற்றங்களும் இன்றி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில், ஆர்பிஐ கூட்டத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்புகளைப் பொறுத்து  தான் சந்தை என்ன மாதிரியான டிரெண்டில் வர்த்தகமாகும் என்பதைச் சொல்ல முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்