ஃபண்ட் ஹவுஸ் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்!ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ந்தியாவில் முதன்முதலாக துவக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூ.டி.ஐ ஆகும். அதன்பிறகு மியூச்சுவல் ஃபண்ட் நடத்த லைசென்ஸ் வழங்கப்பட்டது 1987-ம் ஆண்டில்தான். எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்தான் அந்த லைசென்ஸ் பெற்ற நிறுவனம்!

இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகும். தற்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.1,06,000 கோடிக்கும் மேலான சொத்துக் களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் டாப் 6 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குள் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் எஸ்.பி.ஐ மற்றும் ஃபிரான்ஸ் நாட்டினைச் சார்ந்த அமுண்டி (Amundi) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலில் அமுண்டி நிறுவனம், ஐரோப்பாவில் முதலிடத்திலும், உலகளவில் 9-வது இடத்திலும் உள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளில் இந்த நிறுவனம் அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலை நடத்தி வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 1000 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள சொத்தினை உலகெங்கிலும் நிர்வகித்து வருகிறது.

சிறந்த பங்குகளை தேர்வு செய்து, அவற்றை நன்றாக மேலாண்மை செய்து, நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தருவதே இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தார்மீக மந்திரமாக உள்ளது. குறுகிய காலக் கண்ணோட்டத்தில் ஒருபோதும் தங்களது முடிவை எடுப்பதில்லை. முதலீடு செய்வதற்கு ஆக்டிவ்வாக 320 நிறுவனப் பங்குகளையும், 258 நிறுவன கடன் பத்திரங்களையும் இதன் ரிசர்ச் டீம் எப்போதும் ஆராய்கிறது.

மேலும், வருடத்துக்கு 1,000 முறைக்கு  மேல் நிறுவனங்களை நேரடியாக விசிட் செய்கிறது. இவை தவிர, இதன் ரிசர்ச் டீம் செமினார் மற்றும் கான்ஃபரன்ஸ் அழைப்புகள் மூலமும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் புது ஐடியாக்கள் கிடைப்பதுடன், நிறுவனங்களைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் தெரிய வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்