பிசினஸ் சீக்ரெட்ஸ் - 39

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கேளுங்கள் சொல்கிறேன்!‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

டந்த பல வாரங்களாக பிசினஸ் சூட்சுமங்களை இந்தத் தொடரில் சொல்லி வந்தேன். இப்போது வாசகர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

?இப்போது என்னென்ன பிசினஸ்கள் லாபகரமாக போகிறது?

@ வில்ஃப்ரட்.

‘‘நிறைய தொழில்கள் இருக்கின்றன. உதாரணமாக, எஃப்.எம்.சி.ஜி, பார்மா போன்ற தொழில்களை சொல்லலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்கள் பலவும் தற்போது லாபகரமாக செயல்படுகின்றன. இந்தத் தொழில்களை செய்வதற்கு நிறைய முதலீடு தேவைப்படாது என்பது முக்கியமான விஷயம். இந்தத் தொழில்களில் எது உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்பதை அறிய களத்தில் இறங்கி முழுமையாக விசாரியுங்கள்.’’

?அக்கவுன்டன்ட் ஆக இருக்கும் நான் இப்போது பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் தனியாக தொழில் தொடங்க ஆசைதான். ஆனால், அக்கவுன்ட்டிங் செய்வதா, இல்லை ஆடிட்டிங் செய்வதா, இல்லை டாக்ஸ் தொடர்பான தொழிலை செய்வதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன். எனக்கு வழி காட்டுங்கள்.

@ஆர்.தேவதாஸ், பெங்களூர்.

‘‘உங்களுக்கு மட்டுமல்ல, புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும் இதுமாதிரி குழப்பம் வருவது இயற்கைதான். இந்த குழப்பத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி, நீங்கள் சொல்கிற தொழிலை செய்பவர்களில் பலரையும் சந்தித்துக் கேளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்