இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

ந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கியிருக்கிறது பனாமா பேப்பர்ஸ். உலகின் எந்தெந்த நாடுகளில் இருந்தெல்லாம் வரி சொர்க்க நாடுகளில் (Tax Haven Countries) கறுப்புப் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

இந்த ரிப்போர்ட்டின் நம்பகத்தன்மையை சந்தேகப்படுவதற்கில்லை. காரணம், இந்த ரிப்போர்ட்டில் தனது பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது தந்தையார் இந்த ஃபண்டில் போட்டு வைத்திருந்த பணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இந்த ரிப்போர்ட்டை உண்மை என்று சொல்ல இது  போதுமே! 

ஆனால் நடிகர் அமிதாப்பச்சனோ, தனக்கும் இந்த ரிப்போர்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நம் நாட்டைச் சேர்ந்த வேறு நபர்கள் மெளனம் காக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மீது நமது மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். காரணம், கடந்த காலங்களில் இதுபோன்ற ஒரு பட்டியலை பெற பல வெளிநாட்டு வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், உருப்படி யான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்போது பல முக்கியமான நபர்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இது  தொடர்பாக சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கத்தை தொடர்புகொண்டு, கூடுதல்  தகவல்களை நமது மத்திய அரசாங்கம்  கேட்டுப் பெற வேண்டும். உள்ளபடியே வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்