இன்பச் சுற்றுலாவுக்கும் இன்ஷூரன்ஸ்!

ஏன்... எதற்கு... எப்படி?சி.சரவணன்

நீங்கள் சுற்றுலா செல்லத் தயார் எனில், வீட்டை விட்டு வெளியே கிளம்பும்முன் அவசியம் செய்திருக்க வேண்டிய விஷயம், டிராவல் இன்ஷூரன்ஸ். 

இதில் ஆச்சரியப்படும் ஒரு விஷயம், ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவன ஆய்வின்படி, நம் மக்களில் டிராவல் இன்ஷூரன்ஸ் பற்றி 93% பேருக்கு   விழிப்பு உணர்வு இருக்கிறது. என்றாலும் பாலிசி எடுத்திருப்பவர்கள் வெறும் 38% பேர்தான்.

லட்சக்கணக்கில் செலவு செய்து சுற்றுலா செல்லும் நம்மில் பலர் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் டிராவல் பாலிசியை எடுப்பதில்லை. ஆனால், எதிர்பாராத பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கும் ஆபத்பாந்தவன் இந்த சுற்றுலா பாலிசி. சுற்றுலா செல்வது இந்தியாவுக்குள் (உள்நாடு) எனில், ‘டொமெஸ்டிக் டிராவல் பாலிசி’, வெளிநாடாக இருந்தால் ‘ஓவர்சீஸ் டிராவல் பாலிசி’ எடுக்க வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலா செல்லும்போது அவசியம் டிராவல் இன்ஷூரன்ஸை எடுக்க வேண்டியதற்கான முக்கிய காரணம், வெளிநாடு களில் மருத்துவச் செலவு மிக அதிகமாக இருப்பதே. உதாரணமாக, அமெரிக்காவில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் தோராய செலவு ரூ.2.6 லட்சமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்