டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்த என்ன செய்யவேண்டும்?

கேள்வி - பதில்

? என் வயது 26. சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். 2014-ல் 10 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தேன். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் ?

மோகன்குமார்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“டேர்ம் இன்ஷுரன்சஸை அதிகப்படுத்த அதே இன்ஷுரன்ஸ் நிறுவனத்தையோ அல்லது வேறு ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தையோ அணுகி, மீண்டும் ஒரு புதிய படிவத்துடன், அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று கொடுத்து, மருத்துவப் பரிசோதனை செய்து அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.”

?கடந்த இதழில் சப்-புரோக்கராக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள்! அதற்கு தேர்வு ஏதாவது எழுத வேண்டுமா?

சண்முகம்,

ரமேஷ், மேனேஜர், நெஸ்டோ குரூப் ஆஃப் கம்பெனீஸ்

“என்ஐஎஸ்எம் (NISM - National Institute of Securities Markets) நடத்தும் ஈக்விட்டி டெரிவேட் டீவ்ஸ் தேர்வு எழுதி குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வுக்கான கட்டணம் ரூ.1,500. இந்த தேர்வை ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். கல்வித் தகுதி பிளஸ் 2. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு புரோக்கரிடம் சப் புரோக்கராக சேர்ந்து பணிபுரிய முடியும். இது தவிர, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ரெலிகேர் போன்ற பங்குத் தரகு நிறுவனங்களில் டீலர் அல்லது ரிலேஷன்சிப் மேனேஜராக பணியாற்றலாம். ஆரம்பத்தில் மாதம் ரூ.15,000 கிடைக்கும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தால், ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வருமானம் கிடைக்கும். வேலைக்குச் சேர எண்ணமில்லை என்றால் பங்குத் தரகு நிறுவனங்களுக்கு சேனல் அல்லது பிசினஸ் பார்ட்டனராக செயல்பட முடியும். இதற்கு முதலீடு அதிகம் தேவைப்படாது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்