பட்ஜெட் எதிரொலி: கார்களின் விலை குறையுமா?

ராகுல் சிவகுரு

டந்த மத்திய பட்ஜெட்டில் கார்களுக்கு பல புதிய வரிகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி முதல் கார்களின் விலை உயர்ந்துள்ளது. பல கார் நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை (பார்க்க விலை அதிகரிப்பு பட்டியல்) கடந்த மார்ச் மாதமே  செய்துவிட்டன.

உதாரணமாக, ஹோண்டா கார் ரூ.4,000 முதல் ரூ. 79,000 வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலையேற்றத்தினால் கார் விற்பனை கொஞ்சம் சரிந்திருப்பதாக சொல்கின்றன கார் விற்பனை நிறுவனங்கள். 

கார்களின் விலையை ஒரே யடியாக உயர்த்துகிற அளவுக்கு பட்ஜெட்டில் அப்படியென்ன புதிய வரிகளை விதித்தார்கள் என்று முதலில் பார்ப்போம்.

நான்கு மீட்டர் நீளம் கொண்ட 1,200 சிசி கொள்ளளவுக்குக் குறைவான பெட்ரோல் - எல்பிஜி - சிஎன்ஜி எரிபொருள் இன்ஜின் கொண்ட கார்களுக்கு 1 சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் (Infra Cess Tax) விதிக்கப்பட்டுள்ளது.

டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நான்கு மீட்டர் நீளத்துக்குள், 1,500 சிசி கொள்ளளவுக்குக் குறைவான டீசல் இன்ஜின் கார்களின் மீது 2.5   சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், அவற்றின் மீது 1 சதவிகிதம் இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

பெரிய வாகனங்கள் அதாவது, பெரிய இன்ஜின் கொண்ட கார்கள், எஸ்யுவிகள், லக்ஸுரி செடான் கார்கள் போன்றவற்றின் மீது 4% இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள், வாடகை கார்கள், ஆம்புலன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங் களுக்கு இந்த இன்ஃப்ரா செஸ் டாக்ஸ் பொருந்தாது. இதனுடன் கோல்ஃப் கார்ட் மீது விதிக்கப்படும் சுங்க வரி 10 சத விகிதத்தில் இருந்து 60 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரிகளால் கார்களின் விலையை உயர்த்தி நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்