யார் நல்ல நிதி ஆலோசகர்?

கண்டறியும் வழிகள்!மு.சா.கெளதமன்

லக அளவில் நிதி ஆலோசகர்களின் தேவை கூடிக்கொண்டே செல்கிறது. நிதி ஆலோசனைகளைக் கேட்டு, முதலீட்டை அமைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

நிதி ஆலோசனை கேட்டுப் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற அதே நேரத்தில், நிதி ஆலோசனை தருகிறவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிதி ஆலோசகர்களில் சரியானவரை தேர்வு செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்கிற கேள்விகளை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிதி ஆலோசகராக இருக்கும் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“இன்று உலகளவில் நிதி ஆலோசகரிடம் நியாயமான கட்டணம் செலுத்தி நிதி ஆலோசனைகளை பெறுவதற்கு தயங்கும் முதலீட்டாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்னும்போது இந்தியாவில் இல்லாமல் இருப்பார்களா?

குடும்ப நிதி ஆலோசனையை இலவசமாக தரலாமே என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஒரு நிதி ஆலோசகர் இலவசமாக நமக்கு நிதி ஆலோசனைகளை வழங்குகிறார் எனில், அவர் தன் முழுத்திறனையும், அறிவையும் பயன்படுத்தி சரியான நிதி ஆலோசனையை நமக்கு வழங்கி இருப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நிதி ஆலோசகர் தந்த இலவச ஆலோசனையைப் பின்பற்றி நாம் நஷ்டமடைந்தால், அதை அவரிடம் உரிமையுடன் கேட்க முடியுமா? எதிர்காலத்தை அறிய ஜோசியம் பார்க்கும்போதுகூட நம்மவர்கள் பணம் கொடுக்கத் தவறுவதில்லை. ஆனால், எதிர் காலத்தின் நிச்சயமான தேவைகளை நிறைவேற்றும்  உருப்படியான தீர்வுகளை சொல்லும் நிதி ஆலோசகருக்கு கட்டணம் தர யோசிக்கிறோம். 

என்றாலும் நம் நாட்டிலும் கட்டணம் செலுத்தி நிதி ஆலோசனை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம்.

நம்பிக்கையும், வருமானமும்!


சில ஆண்டுகளுக்குமுன் ஐந்து வளர்ந்த நாடுகளில் சி.எஃப்.ஏ இன்ஸ்டிட்யூட் மற்றும் எடெல்மேன் இன்வெஸ்டார் ட்ரஸ்ட் ஸ்டடி ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1,604 சிறு முதலீட்டாளர்களிடமும், 500 நிறுவன முதலீட்டாளர் களிடமும் ‘ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுக்கும்போது என்னவெல்லாம் கவனிப்பீர்கள்?’ என்கிற தலைப்பில் நடத்திய கணக்கெடுப்பில் 52 சதவிகி தத்துக்கும் அதிகமானவர்கள் நம்பிக்கை மற்றும் தொழில் தர்மம்தான் முக்கியம் என்று சொல்லி இருக்கிறார்கள். 17 சதவிகிதத்தினர் நிதி ஆலோசகர் மூலமாக கிடைக்கும் வருமானம் முக்கியம் என்று சொன்னார்கள்.

என்றாலும், ஒரு சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்ய என்ன விஷயங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதை சொல்கிறேன்.

அனுபவமே சிறந்த ஆசான்!

ஒரு நிதி ஆலோசகருக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கிறது, எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்திருக்கிறார் என்கிற விஷயங்கள் நமக்கு நேரடியாக உதவக்கூடியவை. ஒரு நிதி ஆலோசகர் அதிக வருடங்கள் நிதித் துறையிலேயே இருந்திருக்கிறார் எனில், பல தரப்பான முதலீட்டாளர் களையும், அவர்களின் பல புதிய வகையான இலக்கு மற்றும் தேவைகளையும் புரிந்துகொண்டு பூர்த்தி செய்திருப்பார். எனவே, நமக்கு அப்படிப்பட்ட ஒரு அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர் கிடைத்தார் எனில், நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

கற்க கசடற!

ஒரு நிதி ஆலோசகர் தன் பணத்தை முதலீடு செய்வதில்லை. மாறாக, தன் வாடிக்கையாளரான முதலீட்டாளரின் பணத்தை முதலீடு செய்கிறார். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னை அப்டேட் செய்து கொள்கிறாரா, சந்தையில் என்ன மாதிரியான முதலீட்டுச் சாதனங்கள் மாற்றம் அடைந்து இருக்கின்றன, எந்த மாதிரியான முதலீடுகளுக்கு வரிகள் அதிகரித்திருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது, எதற்கு கூடுதல் வரிச் சலுகை கிடைக்கிறது, எந்த மாதிரியான முதலீடுகள் அடுத்த சில ஆண்டுகளில் அதிக வருமானம் கொடுக்கும் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் ஒரு நிதி ஆலோசகர் தெரிந்து வைத்திருக்கிறாரா என்பதை நாம்தான் அவரிடம் கேள்விகளை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் நமக்கு பரிந்துரைக்கும் ஆலோசனைகள் மூலம் பணத்தைப் பெருக்கி, வரியையும், நஷ்டத்தையும் குறைக்க முடியும். அதோடு குறிப்பாக, நம் ரிஸ்க் எடுக்கும் திறனை பொருத்து, முதலீட்டு சாதனங்களை பரிந்துரைக்க முடியும்.

ரெகுலேட்டார்களும் - நிதி ஆலோசகரும்!

நிதி ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளான செபி, ஆம்ஃபி, ஐஆர்டிஏ போன்றவை புதிதாகக் கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தங்களை எல்லாம் உடனுக்குடன் அப்டேட் செய்துகொள்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நிதி ஆலோசகர்கள் தங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் நடத்தும் கூட்டங் களுக்கு தொடர்ந்து செல்வதன் மூலம் புதிய அறிவுரைகளையும், அப்டேட்களையும் தெரிந்து கொண்டு முதலீட்டாளர்களுக்கு தகுந்தாற் போல செயல்பட முடியும். இது தவிர, லேட்டஸ்ட் ஆன முதலீட்டு டிரெண்டு களையும் அவர் எப்படி தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்