கம்பெனி ஸ்கேன்: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

(NSE Symbol: BRITANNIA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ளது 1892-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ நிறுவனம். இது பிஸ்கட்டுகள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது எல்லோருக்கும் தெரியும்.

கிட்டத்தட்ட 123 ஆண்டுகளுக்கு முன்னால் கொல்கத்தாவில்  அன்றைய பிரிட்டிஷ்  அரசாங்க ஊழியர்களுக்கு டீ டைமில் தரப்படுகிற பிஸ்கட்களை தயாரிக்கும் சிறியதொரு பேக்கரியாக ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். இப்போது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்ட பிஸ்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறது தற்சமயம் தனிப்பட்ட ஐந்து வித முக்கிய பிரிவுகளில் பிஸ்கட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளை கிட்டத்தட்ட 35  லட்சம் கடைகளின் வாயிலாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கிறது.

தன் தயாரிப்புகள் இந்தக் கடைகளின் வாயிலாக இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவதாக சொல்கிறது  பிரிட்டானியா நிறுவனம். ரூ.1,500  கோடி ரூபாய் அளவிலான விற்று வரவு கொண்ட இந்த நிறுவனம், நல்ல தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுவையான மற்றும் ஓவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஒரே தரத்தினையும் சுவையையும் கொண்டிருக்கும் வகை யிலான பிஸ்கட்களை உற்பத்தி செய்வதாக பெருமைப்படுகிறது.  

தொழில் எப்படி?

இந்த நிறுவனம் செயல்படும் துறை எஃப்எம்சிஜி துறையாகும். நாளடைவில் இந்த நிறுவனம் ஒரு பிஸ்கட் மட்டுமே தயாரிக்கும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாறி ப்ரெட், ரஸ்க், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற பல்வேறு உணவுப்பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த அளவீட்டில் பார்த்தால், உணவுப்பொருட்கள் உற்பத்தி என்ற துறையில் நொறுக்குத்தீனிகள், காலை உணவுக்கான தயாரிப்புகள், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், சாக்லேட்கள் போன்ற பல பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் சில அத்தியாவசியமான உணவுகளாகவும், சில தேவைக்கேற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் வாங்கப்படும் பொருட்களாக இருக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ற அளவில் பெரிய விற்பனை மாற்றத்தை சந்திக்காது என்று எதிர்பார்க்கலாம் என்ற வேளையில் புதிய போட்டிகள் என்பது இந்தத் துறையில்  அத்தியாவசிய உணவுப்பொருட்களின் பிரிவில் அடிக்கடி தலையெடுக்கலாம். அந்தச் சூழல்களில் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு லாபத்தில் பாதிப்பு ஏற்படலாம். மாறாக, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு வரும் வேளையில் மதிப்புக் கூட்டப்பட்ட வகை பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

பொதுவாக, இந்த வகை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் லாபம் சற்று அதிகம் கிடைக்கும்.   இந்த வகை மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் தற்சமயம் இந்தியச் சந்தையில் சற்று குறைவாகவே இருந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். பொருளாதார சூழல் சீராக இருக்கும் வேளையில் பல்வேறு விதமான வாய்ப்புகளைப் பெறக்கூடிய துறை இது எனலாம். தற்போதைய சூழலில் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் துறை ரூ.75,000 கோடி என்கிற அளவிலும்,   பிராண்டட் பேக்கேஜ்டு கேக்குகள் மற்றும் ரஸ்க்கு களுக்கான சந்தை ஆரம்ப நிலையிலும், பிராண்டட் பேக்கேஜ்டு சிறு தீனிகளுக்கான சந்தை ரூ.30,000  கோடி வரையிலுமான சந்தை அளவில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்