டிரேடர்களே உஷார் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஷேர் டிப்ஸ்: 99% அக்குரேட், மொத்தத்தில லாஸ் 100% தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

‘‘கணேசா..... கணேசா....’’ கணேசனின் தாய், அவரை உலுக்கி எழுப்பினார். ‘‘ஏன்டா, என்ன ஆச்சி?’

‘‘ஒண்ணும் இல்லமா. நீங்க போங்க.’’ கணேசன், சேரில் தலையை சாய்த்து, மீண்டும் கண்ணை மூடினார்.  ‘‘என்னமோ கணேசா, இப்பல்லாம் நீ ஒரு பித்து புடிச்சவன் மாதிரி இருக்க!’’ என்று சொல்லிக் கொண்டே, அவர் தாயார் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

கணேசன், ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். அவருக்கு இந்த ஷேர் மார்க்கெட் மேல எப்பவும் ஒரு புதிரான காதல். இதுல என்னவோ நடக்குது. இதை கண்டுபிடிச்சிட்டா, பெரிய அளவில பணம் சம்பாதிச்சிடலாம் என்று வலிமையாக நம்புகிறவர். ஆனால், மார்க்கெட்கிட்ட போகவே பயம். பயம் ஒரு பக்கம் இருந்தாலும், கூடவே இந்த மார்க்கெட்டில் ஏதாவது பண்ணனும் என ஆசை ஒட்டிக்கிட்டே இருந்தது. இந்த டிரேடிங்க எங்க ஆரம்பிக்கனும், எப்படி தொடரனும் என்று  குழப்பமாகவே இருந்தது. அவரும் ஏதோதோ, மார்க்கெட்டை அனலைஸ் செய்து, பேப்பர் டிரேட் பண்ணி பார்ப்பார். எல்லாம் அப்படியே நடக்கும். ஆனால், காசு போட்டு டிரேட் செய்தால் எல்லாம் தலைகீழாகவே நடக்கும்.

ஏன் எல்லாம் தலைகீழாக நடக்குது? ஒரு நிமிஷம் தன்னுடைய கணிப்பை திரும்பிப் பார்த்தார். அன்று டாடா ஸ்டீல், தன்னுடைய லாப நஷ்டக் கணக்கை வெளியிட்டது. அதில், அந்த நிறுவனம், கணிசமான நஷ்டத்தை கணக்கு காட்டியிருந்தது. ஒரு நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகக் காட்டினால், அதன் பங்கின் விலை இறங்க வேண்டும் என்று ஒரு கணக்கைப் போட்டார். 

அதன்படி டாடா ஸ்டீல் பங்குகளில் ஷாட் போனார்.  அதன்பின் விலை கொஞ்சம் இறங்குவதுபோல் இருந்தது. ஆனால், திடீரென்று டாடா ஸ்டீல் பங்கின் விலை கடகடவென்று ஏற ஆரம்பித்தது.   இது ஒரு தற்காலிக ஏற்றமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, கண்டிப்பாக இறங்கும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டு இருந்தார். ஆனால், டாடா ஸ்டீல் விலை, இன்னும் இன்னும் என்று ஏறி மார்க்கெட் முடியும் தருவாயில் மிகப் பெரிய அளவில் ஏறி இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் மார்க்கெட் முடிய இருந்தது. புரோக்கர் ஆபிஸில் இருந்து போன்கால்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்