ஃபண்ட் ஹவுஸ் - 18

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்!ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் நம் அனைவருக்கும் தெரிந்த ஷேர் புரோக்கரேஜ் நிறுவனமாகும். இதனுடைய நிறுவனர்கள் நமது பங்குச் சந்தையில் பிரசித்தமான மோதிலால் ஆஸ்வால் மற்றும் ராம்தியோ அகர்வால் ஆவார்கள்.

இந்தக் குழுமம் மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் நமது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்ஸர் மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் ஆகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒரு இளமையான நிறுவனம். 

ஏனென்றால் இது ஆரம்பிக்கப் பட்டது டிசம்பர் 2009-ம் ஆண்டுதான். ஆரம்பித்த முதல் சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் இ.டி.எஃப் திட்டங்களில் தனது இலக்கை வைத்தது. இந்தியா ஒரு இ.டி.எஃப் மார்க்கெட் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள இந்த நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக ஆக்டிவ் ஃபண்டுகளில் தனது ஃபோகஸைச் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

வளர்ந்த நாடுகளில் பங்குச் சந்தை குறியீட்டைவிட அதிக வருமானம் சம்பாதிப்பது கடினம்.  கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் பங்குச் சந்தை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பல ஃபண்டுகளைவிட  அதிக லாபம் சம்பாதித்துத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்