கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ஜெ.சரவணன்

ச்சா எண்ணெய்!   கடந்த வாரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏறி இறங்கி வர்த்தகமானது. ஆரம்பத்தில் 40 டாலர் என்ற நிலையிலிருந்தது, இரண்டு வர்த்தக தினங்களில் 42 டாலராக உயர்ந்தது. அதன்பிறகு மீண்டும் 40 டாலருக்கே திரும்பியது.

சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கைப்படி, கச்சா எண்ணெய்யின் இருப்பு, இந்த நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரலாகக் குறையும் என்று கூறியிருக்கிறது. முதல் பாதி ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய் இருப்பு ஒரு நாளைக்கு 15 லட்சம் பேரலாக இருக்கிறது. இதன் காரணமாக உற்பத்தியைக் குறைக்க தோஹாவில் பேச்சுவார்த்தை  நடக்கவுள்ளது. இருந்தாலும் ரஷ்யா இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலை ஏற்றம் இருக்காது என தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் தேவையும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறை வாக இருக்குமென தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் உற்பத்தியைக் குறைக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானைப் போலவே மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தக் குழப்பங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்