படிவம் எண் 60-ஐ எதற்கெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்?

கேள்வி - பதில்

?என்னிடம் பான் கார்டு இல்லை. படிவம் எண் 60-ஐ எதற்கெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்?

கஜேந்திரன்,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

 “வருமான வரிச் சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரந்தரக் கணக்கு எண் குறிப்பிடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், பான் எண்ணைப் பெறாதவர்கள் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்வரும் நிகழ்வுகளில் ஒருவர் பான் கார்டு இல்லை என்றால் படிவம் 60-ஐ சமர்ப்பிக்கலாம்.

ரூ.5,00,000-க்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்கும்போது / விற்கும்போது, மோட்டார் வாகனங்கள் (இரு சக்கர வாகனங்கள் தவிர) விற்கும்போது / வாங்கும்போது, வங்கியில் ரூ.50,000-க்கு மேல் வைப்பு நிதி வைக்கும்போது, ரூ.1,00,000-க்கு மேல் பங்குகளை விற்கும்போது / வாங்கும்போது, ரூ.50,000-க்கு மேல் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கும்போது, அலைபேசி அல்லது தரை வழி தொலைபேசி எண்ணைப் பெற விண்ணப்பிக்கும்போது, தங்கும் விடுதி அல்லது உணவகத்தில் ரூ.25,000-க்கு மேல் பணம் செலுத்தும்போது, வங்கிகளில் ரூ.50,000-க்கு மேல் வரைவு காசோலை (டிடி) எடுக்கும்போது படிவம் எண் 60-ஐ சமர்ப்பிக்கலாம். இந்த படிவம் எண் 60 என்பது ஒரு வேலை தடை பெறாமல் இருக்க தற்காலிக தீர்வுதான். எனவே, பான் எண் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு ஒன்றும் அதிகம் செலவாகப் போவதில்லை.”.

?தனுஷ் டெக்னாலஜீஸ் (Dhanus Technologies) பங்குகள் தற்போது வர்த்தகமாகவில்லை. இந்தப் பங்கின் விலை 65 பைசாவாக (முக மதிப்பு ரூ.10) இருந்தபோது, 6 லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கியிருக்கிறேன். இந்தப் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

@ - கேசவன்,

எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

“சில காலமாக தனுஷ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் வர்த்தகமாகவில்லை. பங்குச் சந்தையின் நடைமுறையைச் சரியாக பின்பற்றாமல் இருந்ததால், இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 0.08 பைசாவுக்கு இந்த பங்கு வர்த்தகமானது. இனிமேல் இந்தப் பங்கு வர்த்தகம் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. எனவே, இந்தப் பங்கில் முதலீடு செய்துள்ள பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது.”

?என் வயது 26. சுமார் 12 வருடங்கள் கழித்து ரூ.10 லட்சம் தேவை. என்னால் தற்போது மாதம் 3,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் என் இலக்கை அடைய முடியும்?

@ - சிவக்குமார்,

விஜய்பாபு, நிதி ஆலோசகர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் , கோவை.

“நீங்கள் பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் ரூ.3,000 வீதம் 12 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால் 12% கூட்டு வட்டி அடிப்படையில் சுமார் ரூ.9.7 லட்சம் கிடைக்கும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்