திருமணத்துக்கும் வீட்டுக்கும் திட்டம் தேவை!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

ன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்கால முதலீட்டுக்காக மெனக்கெடுவதில் படு கில்லாடிகளாகத்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் பிளான் கேட்டு வந்த பல இளைஞர்களுக்கு கலர்ஃபுல்லான பல கனவுகள் இருந்தபோதிலும், அதற்காக சிரத்தை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

அவர்களாகவே திட்டமிட்டு ஓரளவுக்கு முதலீடுகளை செய்தும் வருகிறார்கள்.

இப்போது பிளானிங் கேட்டு வந்துள்ள மதுரையைச் சேர்ந்த பாலாஜியும் பக்கா தெளிவோடுதான் முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார். ‘‘சார், எனக்கு 29 வயசு ஆகுது. பேங்க்ல வொர்க் பண்றேன். எனக்கு 31 வயசுல கல்யாணம் பண்ணிக்கலாம்னு திட்டம். எனக்கு கல்யாணத்துக்கு பணம் சேர்க்கவும், லோன் போட்டு சொந்தமா ஒரு வீடு வாங்கவும் முதல்ல பிளான் போட்டு கொடுங்க. குழந்தை பிறந்தபிறகு அதுகளுக்கான பிளானை செய்துகொள்ளலாம்’’ என்றார். சமீபத்தில் பிளானிங் கேட்ட சில இளைஞர்களின் தொலைநோக்குத் திட்டங்களை வரிவிடாமல் படித்திருப்பார் போலும்.

‘‘காலேஜ்ல லேப் அசிஸ்டென்டா இருந்து ரிட்டயர் ஆனவரு என் அப்பா.  பென்ஷன் வருது. அம்மா, ஹவுஸ்ஒய்ஃப். எனக்கு 25,000 ரூபாய் சம்பளம். 21,500 ரூபாய் கையில வாங்குறேன். எனக்கு பெரிசா எந்த செலவும் இல்ல. வீட்டுச் செலவுக்கு 5,000 ரூபாய் தர்றேன். மீதித் தொகையை சேமிக்கிறேன். என் கல்யாணத்துக்கு என் சார்பா மூன்று லட்சமாவது சேர்த்து அப்பாவுக்கு கொடுக்கணும். இப்ப எஃப்.டி-ல ஒரு லட்சம் ரூபாய் இருக்கு. இன்னும் ரெண்டு லட்சம் சேர்க்கணும். சீக்கிரமா 25 லட்ச ரூபாய் மதிப்புல  சொந்த வீடு வாங்கணும். இப்ப வாடகை வீட்டுல இருக்கோம்.  வேலை பார்க்கும் பெண்ணாகத் தேடி வருகிறோம். திருமணத்துக்கு பிறகு வீடு வாங்கத் திட்டம் இருப்பதால், எனக்கு இ.எம்.ஐ கட்டுவதில் சிக்கல் இருக்காது. இந்த வருடம் பதவி உயர்வுடன் கூடிய சம்பளம் உயர்வு 3,000 ரூபாய் இருக்கும். அடுத்த ரெண்டு மாதங்களில் என் சம்பளம் ரூ.3,000 அதிகரித்திருக்கும்.

எனக்கு 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கு. ஹெல்த் பாலிசி ஆபிஸில் எடுத்து தந்திருக்காங்க. அப்பா, அம்மாவுக்கு தனியா ஹெல்த் பாலிசி இருக்கு. மற்றபடி வேறு எந்த சொத்துக்களும் இல்லை. இப்போதைக்கு பக்காவான பிளான் கொடுங்க. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் நீங்கதான் பிளான் பண்ணித் தரணும்” என்ற கோரிக்கையை வைத்தவர் தன் நிதிநிலை விவரங்களை கொடுத்தார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

‘‘சூப்பர் பாலாஜி... நிறைய விஷயங்களை போட்டுக் குழப்பிக்கொள்வதைவிட எது முதலில் என நீங்களே முடிவு செய்து தெளிவாக கேள்வி கேட்ட விதம் பாராட்டுக்குரியது. பெரும்பாலான இளைஞர்கள் இளம் வயதில் வீடு, மனை என சொத்து வாங்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால் வீடோ, மற்ற சொத்துக்களோ வாங்கும்முன் அதற்கு பொருளாதார ரீதியாக தயாராக இருக்க வேண்டியது முக்கியம். சுய திருப்திக்காகவும், பெருமைக்காகவும் வாங்குவது, மற்ற முக்கியமான இலக்குகளுக்கு சேமிக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்