கார்ப்பரேட் சதுரங்க வேட்டை... சுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்!

சி.சரவணன்

ம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு போன்கால் நிச்சயம் வந்திருக்கும். எதிர்லைனில் இருக்கும் பெண், ‘‘மொத்தமாக 3 லட்ச ரூபாயை எங்க ரிசார்ட்ல கட்டிடுங்க.

அடுத்த 25 வருஷத்துக்கு நீங்க எப்போ வேணுமின்னாலும், எந்த வாடகையும் இல்லாம உங்க குடும்பத்தோட எங்க ரிசார்ட்ல வந்து தங்கலாம்.  தமிழ்நாடு முழுக்க 15 இடங்கள்ல எங்களுக்கு ரிசார்ட் இருக்கு’’ என்று ஆசை வார்த்தை காட்டுவார். அட, நல்ல திட்டமா இருக்கே என்று காது கொடுத்து கேட்க ஆரம்பித்தோம் என்றால், 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாயை உங்களிடம் வசூல் செய்யாமல் விடமாட்டார்கள். அதன்பிறகு அவர்கள் சொன்னபடி நடப்பார்களா என்பது கடவுளுக்கும், அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும். இந்த திட்டத்துக்கு பெயர்தான் டைம்ஷேர்.

இதை முதலீடு என்றுதான் அழைக்கிறார்கள். நீங்கள் இன்வெஸ்ட் பண்ணுவது ஒரு சுற்றுலா தளத்தின் ஹோட்டல் அறையில்! அந்த ஹோட்டல் அறை வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் உங்களுக்கு தங்குவதற்காக ஒதுக்கித் தரப்படும். அந்த நாட்களில் அங்கே இலவசமாக தங்கிக் கொள்ளலாம். அந்த நிறுவனத்துக்கு எங்கெல்லாம் கிளை உள்ளதோ, அங்கெல்லாம் உங்களுக்கு அறை கிடைக்கும். இதன்மூலம் கட்டுகிற காசுகேற்ப உலகம் முழுக்கவோ அல்லது இந்தியா முழுக்கவோ எங்குவேண்டுமானாலும் வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் ஜாலி டூர் அடிக்கலாம்.

ஒரு நல்ல நாளில் இன்பச் சுற்றுலா போகலாம் என்று வீட்டிலிருப்பவர்களை தயார் செய்துவிட்டு, தொடர்புடைய கம்பெனிக்கு போனை போடுவோம். அவர்களிடமிருந்து வருகிற முதல் பதில் நீங்கள் கேட்கும் நாளில் அறை காலி இல்லை என்பதுதான். அப்படியே ஒதுக்கி கொடுத்தாலும், தங்கி இருக்கும் காலத்தில் பல புதுப்புது கட்டணங்களை வசூலித்து உங்கள் பர்ஸை காலி செய்து, உங்கள் மனக் கவலையைக் கூட்டிவிடுவார்கள்.

இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்ந்து தங்கும் இடத்தை பெறுவதைவிட, தனியே செலவு செய்து வந்தால்கூட குறைவாகத்தான் செலவாகும் என்கிற எண்ணம் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஆனால், ஏற்கெனவே உங்க பாக்கெட்டிலிருந்து பல லட்சம் போயிருக்கும். வீட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் காசைக் கொட்டி கரியாக்கியதற்காக உதையும் கிடைக்கும்.

புதுப்புது ஏமாளிகள் கிடைத்து வருவதால் இதுபோன்ற சுற்றுலா கிளப் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் தங்கும் அறை மட்டும்தான் இலவசம் என்பது யாருக்குமே தெரியாது. உள்ளே நுழைந்துவிட்டால் பராமரிப்புக் கட்டணம், தண்ணீர், மின்சார செலவு என ஏகப்பட்ட பணத்தை வசூலிப்பதாக அண்மைக் காலத்தில் அதிக புகார்கள் வந்துக் குவியத் தொடங்கியிருக்கின்றன. நுகர்வோர் நீதிமன்றங்களில் கணிசமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்