ஏற்றுமதி செய்வோம்! ஏற்றம் பெறுவோம்!

ஜெ.சரவணன்

நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்ற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை  மீண்டும் சென்னையில் கடந்த எப்ரல் 9, 10 தேதிகளில் நடத்தியது.

இந்த பயிற்சி வகுப்பில் முதலில் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல உதவி இயக்குநர் திருமதி செல்வநாயகி,“ ஏற்றுமதியாளர் களுக்கு உதவி செய்வதற்கு பல புரமோஷனல் கவுன்சில்கள் இருக்கின்றன. அதில் ஃபியோவும் ஒன்று. பெரும்பாலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இதில் உறுப்பினராக இருந்தாலே போதுமானது” என்றார்.

அவரைத் தொடர்ந்து ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படைகளையும் அதற்குத் தேவையான விஷயங்களை யும், சட்ட ரீதியான நடைமுறைகளை யும் வழக்கறிஞர் எஸ்.சிவராமன் பேசினார். புளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன், ஏற்றுமதி தொழிலில் உள்ள நுட்பங்கள்,  சவால்கள், நெளிவுசுழிவுகளை விளக்கமாக எடுத்துகூறி, பங்கேற்பாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்