கேட்ஜெட்ஸ்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஏம்ஸர் ஃபிட்ஸர் கா: (Amzer Fitzer Ka)

ஸ்மார்ட் போன் கேஸ், கேபிள், சார்ஜர் தயாரிப்பில் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள ஏம்ஸர் நிறுவனத்தின் ஆக்டிவிட்டி டிராக்கர் இது.

கையில் அணியப்படும் இந்த டிராக்கரில் ஒரு கேப்சியூல் உள்ளது. இந்த கேப்சியூல்தான் சென்சார் மற்றும் ஹார்டுவேரைக் கொண்டுள்ளது. பிளாக், புளூ மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட பேண்ட்கள் இந்த டிராக்கரோடு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப இந்த பேண்ட்களை மாற்றிப் பயன் படுத்தலாம். மைக்ரோ USB போர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த பேண்டை  அப்ளிகேஷன் மூலம் கேட்ஜெட்களோடு இணைத்துக் கொள்ளலாம்.

ஏம்ஸர் ஃபிட்ஸர் கா டிராக்கர், ஒரு டிஸ்ப்ளே மற்றும் ஒரு பட்டனைக் கொண்டுள்ளது. பட்டனைப் பயன்படுத்தி, நேரம், நடந்த தூரம், படிகள், பயன்படுத்தப்பட்ட கலோரி, இலக்கின் சதவிதம் போன்றவற்றை பயன்பாட்டாளர்கள் டிஸ்ப்ளேவில் பார்க்கலாம். இந்த பட்டனை அழுத்தி பிடித்தால் ஆன்/ஆஃப் ஆகும். இரண்டு முறை அழுத்தினால் Sleep டிராக்கிங் ஆன் செய்யப்படும்.

கிட்டதட்ட ஏழு நாட்கள் வரை இந்த டிராக்கரின் பேட்டரி உழைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால்,பேட்டரி தீர்ந்து சார்ஜ் செய்து ஆன் செய்தால், அந்த நாளைக்கான டேட்டா அனைத்தும் அழிந்துவிடுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்