நாணயம் லைப்ரரி: ரயில்வே துறையின் கர்மயோகி ஸ்ரீதரன்... மெட்ரோ மேனின் வெற்றிச் சரித்திரம்!

சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகத்தின் பெயர்:  கர்மயோகி – எ பயோகிராஃபி ஆஃப் இ.ஸ்ரீதரன்

ஆசிரியர்:  எம்.எஸ்.அசோகன் 

பதிப்பாளர்:  போர்ட்ஃபோலியோ, பெங்குவின் இந்தியா

தான் செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்கிற நிலையில் அந்தக் கடமைகளை எந்தவிதக் குறைபாடும் இன்றி தர்மநெறியில் நின்று செய்பவர்களை `கர்மயோகிகள்’ என அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒருவர்தான் `மெட்ரோ மேன்’ என உலகளவில் அறியப்படுகிற இ.ஸ்ரீதரன்.

இவரது வாழ்க்கை வரலாறு முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டது. இது இப்போது ஆங்கிலத்தில் `கர்மயோகி – எ பயோகிராபி ஆஃப் இ. ஸ்ரீதரன்’  என மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. 1932-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கருக்காப்புத்தூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீதரன். சுவாரஸ்யமான இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்...

பாம்பன் பாலம் புனரமைப்பு!


1949-ம் ஆண்டு காக்கிநாடா அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, 1954-ம் ஆண்டு `இண்டியன் ரயில்வேஸ் இன்ஜினீயரிங் சர்வீஸ்-ல் சேர்ந்தார் ஸ்ரீதரன். பத்து ஆண்டுகள் கழித்து, அதாவது டிசம்பர் 23, 1964 அன்று அடித்த புயலில் ஆங்கிலேயர்களின் அற்புதம் என அறியப்பட்ட பாம்பன் பாலம் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடி என்கிற சிற்றூர் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அப்போதிருந்த அரசு இந்தப் பாலத்தை இனி புதுப்பிக்க வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம் என நினைத்தது. ஆனால், வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரம் என்பது முக்கியமான புண்ணியஸ்தலம் என்பதால், ராமேஸ்வரம் தீவை நிலப்பகுதியோடு இணைக்கக்கூடிய பாலத்தை மறுபடியும் கட்டியே தீரவேண்டும் என வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்த, ராமேஸ்வர தீவு மக்களுக்கு `விமோசனம்’ கிடைத்தது.

இந்த இயற்கைச் சீற்றம் ஏற்பட்டபோது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ஸ்ரீதரன் தனது சொந்த ஊரான கருக்காப்புத்தூருக்குச் சென்றிருந்தார். விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்பும்படி அவரை அழைத்தது ரயில்வே நிர்வாகம். புயலில் சிதைந்துபோன பாம்பன் பாலத்தை ஆறே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டிய பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதாக கூறி அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆவணங்களை எல்லாம் அவரிடம் கொடுத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்