கம்பெனி ஸ்கேன்: ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ் லிமிெடட்!

(NSE SYMBOL: RELAXO)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ‘ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ் லிமிடெட்’ எனும் காலணிகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.

1976-ம் ஆண்டு ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1984-ல் ஒரு லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டில் பங்கு சந்தையில் பட்டியலிடப் பட்டது. ஆரம்பக் காலத்தில் ஹவாய் செப்பல்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைக்கு பல்வேறு விதமான காலணிகளை உற்பத்தி செய்து அனைத்து ரகமான வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. 

2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தொழில் சர்வேயின்படி, இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்கிறது. 10 லட்சம் ரூபாய் அளவிலான வர்த்தகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த ஆண்டில் 8,700 மில்லியன் ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 

தொழில் எப்படி?


இந்தியாவின் காலணி வர்த்தகம் என்பது கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி அளவிலான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவது பெரிய காலணி உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காலணிகளில் சுமார் 95  சதவிகித அளவு இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பிராண்டட் காலணிகள் விற்பனை என்பது அதிகரித்து வருவதும், பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது காலணிகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை குறைத்தும், பிரீமியம் வகை காலணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் செய்கிறது. மத்தியதர வர்க்க குடும்பங்கள் பயன்படுத்தும் சராசரி காலணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் வியாபாரத்துக்கான வாய்ப்பாகவே கருதலாம்.
 
பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்போது பிரீமியம் வகை காலணிகளின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் லாபமும் சற்றே  இந்தத் துறையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கலாம். சிறு மற்றும் குறுந்தொழில்கள் கணிசமான போட்டியை அளித்துவந்த போதிலும், சமீபகாலமாக பெரிய ஆர்கனைஸ்டு நிறுவனங்கள் இந்தத் துறையில் கணிசமான அளவு கால் பதித்து வளர்ந்து வருகின்றன.

கம்பெனி எப்படி?

ஒரு நாளைக்கு மூன்று லட்சம் ஜோடி காலணி களை தயாரிக்கும் அளவுக்கான  நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித்திறனைக் கொண்டுள்ள இந்த நிறுவனம்,  கடந்த நிதியாண்டில் 12.28 கோடி ஜோடி காலணிகளை விற்பனை செய்துள்ளது.

உற்பத்தி செய்த காலணிகளை விற்பனை செய்ய  டெல்லி, குஜராத், ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இந்த நிறுவனத்துக்கு சொந்த மான 225 நேரடி ஷோரூம்கள் இருக்கின்றன. இது தவிர, 55,0000 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் இதன் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்