தமிழகத்தின் மோசமான பொருளாதார வளர்ச்சி!

திமுக, அதிமுக யார் காரணம்?சோ.கார்த்திகேயன்

மிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கிறது என அதிமுக மீது எதிர்கட்சிகள் விமர்சனம் வைத்தபடி உள்ளன. இதற்கு காரணம், நாங்கள் அல்ல; தி.மு.க.தான் என பதில் சொல்லப்படுகிறது. உள்ளபடி தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமை எப்படி உள்ளது..?

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த தி.மு.க. மற்றும் அ.திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் பார்ப்போம்.
   
தமிழகத்தின் வளர்ச்சி!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் (ஜிஎஸ்டிபி) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தமிழகத்தின் ஜிஎஸ்டிபி அதாவது, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை ஒவ்வொரு நிதி ஆண்டும், முந்தைய நிதி ஆண்டைவிட வளர்ச்சி அடைந்துதான் வருகிறது.

2014-15-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஜிஎஸ்டிபி (நிலையான விலையில்) ரூ.5,15,458 கோடி பெற்று, இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இது 2006-07-ல் ரூ.2,87,530 கோடியாக இருந்தது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி 2014-15-ல் ரூ.9,47,550 கோடியாக இருக்கிறது. (பார்க்க அட்டவணை - 1)

இதன்படி பார்த்தால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டும் வளர்ச்சி அடைந்து வருவதை மறுக்க முடியாது. ஆனால்,  அதை மட்டுமே வைத்து தமிழகத்தின் பொருளாதார நிலைமை வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூற முடியாது.

தனிநபர் வருமானம்!

தமிழகத்தின் தனிநபர் வருமானத்தைப் பொறுத்த வரை, ஒட்டுமொத்த இந்தியாவின் தனிநபர் வருமானத்தைவிட அதிகமாகவே உள்ளது. எனினும், தனிநபர் வருமானத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், ஹரியானா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதில் தமிழகம் 2014-15-ல் தனிநபர் வருமானமாக ரூ.66,635 பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளது. (பார்க்க அட்டவணை - 2)

வளர்ச்சி விகிதம்!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட நன்றாகவே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைவிட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2011-12, 2013-14 மற்றும் 2014-15-ல் சிறப்பாகவே உள்ளது. (பார்க்க அட்டவணை - 3)

ஆனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திமுக ஆட்சியின் காலத்தில், அதாவது, கடந்த 2006-07-ல் 15.21 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்தது.  அதன்பிறகு வளர்ச்சி விகிதம் 6.13%, 5.45%, 10.83%, 13.12% என வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து அதிமுக ஆட்சியில் அதாவது, 2011-12-ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.39% எட்டியது. அதன்பிறகு பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.39%, 7.29%, 7.25% எட்டப்பட்டது.

இதில் குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகள் ஆட்சியின்போதும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒரு சில நிதி ஆண்டுகளை தவிர, மற்ற நிதி ஆண்டுகளில், இந்தியா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சி விகிதத்தைவிட நன்றாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்