ஷேர்லக்: சந்தையை உயர்த்திய மூன்று விஷயங்கள்..!

மீபத்தில் இல்லாத உற்சாகமும் துள்ளலுமாக நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். இருக்காதா பின்னே, கடந்த 14 வாரங்களில் இல்லாத அளவுக்கு நம் பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறதே! என்ன காரணம் என்று நம் முதல் கேள்வியைக் கேட்டோம்.

சில்லென்ற ரோஸ் மில்க்கை ரசித்து உறிஞ்சியபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

‘‘கடந்த வாரத்தில் திங்கள் முதல் புதன் வரை மட்டுமே பங்குச் சந்தைகள் வர்த்தகமானது. வர்த்தகம் நடந்த காலத்தில் இந்த வருடம் பருவமழை நன்றாக இருக்கும் என்கிற கணிப்பு வெளியானது. மேலும், நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவாக பிப்ரவரியில் 5.26 சதவிகிதமாகக் குறைந்திருப்பது, தொழில் உற்பத்தி குறியீடு 2% உயர்ந்தது ஆகிய மூன்று காரணங்களால் கடந்த வாரத்தில் பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டது.

கடந்த புதன்கிழமை அன்று மட்டும் சென்செக்ஸ் 481.16 புள்ளிகள் அதிகரித்தது. மூன்று வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 952.91 புள்ளிகளும், நிஃப்டி 295.25 புள்ளிகளும் அதிகரித்தன. பருவ மழை நன்றாகப் பெய்யும் என்கிற கணிப்பை அடுத்து வேளாண் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று மட்டும் டிராக்டர் உற்பத்தியில் முன்னணியில் திகழும் மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பங்கு 7.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 4.5% உயர்ந்துள்ளது.

பருவ மழை நன்றாக இருக்கும்பட்சத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மழை மீது ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் எஃப்.எம்.சி.ஜி. தொடர்பான பங்குகளையும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான பங்குகளையும் கவனிக்கத் தொடங்கலாம். குறிப்பாக, டிவிஎஸ் மோட்டர், டாபர் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்கார்ட் ஆகிய பங்குகளை ஃபாலோ செய்ய ஆரம்பிக்கலாம்’’ என்றார்.

‘‘கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ரிசல்ட் எப்படி வந்திருக்கிறது?’’ என்று விசாரித்தோம்.

‘‘மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% அதிகரித்து, ரூ.3,597 கோடியாக அதிகரித்து உள்ளது. இது அனலிஸ்ட்களின் மதிப்பீட்டைவிட அதிகம் என்பதோடு, தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக இன்ஃபோசிஸ் லாபம் சம்பாதித்து வருகிறது. இதன் வருமானம் 23.4% அதிகரித்து, ரூ.16,550 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தை மட்டும் இன்றைக்கு இருந்திருந்தால், இந்த நல்ல ரிசர்ல்ட்டுக்காக நிஃப்டி குறைந்தபட்சம் 50 புள்ளிகளாவது உயர்ந்திருக்கும்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த ரிசல்ட்டினை ஒட்டி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம், இந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு செல்பவர்களின் விகிதம் 18.3 சதவிகிதத்திலிருந்து 17.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபத்துக்கும் வேறு நல்ல செய்திகளுக்கும் முக்கிய காரணம் அதன் சிஇஓ மற்றும் எம்டியான விஷால் சிக்காதான் என்கிறார்கள். நாராயண மூர்த்தியைத் தொடர்ந்து நான்கு ஸ்தாபர்களும் தர முடியாத வளர்ச்சியை இவர் தந்திருப்பது ஆச்சரியமே. கடந்த காலத்தில் ஏற்பட்ட பல சிக்கல்களிலிருந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விடுவித்த சிக்கா உண்மையில் சக்ஸஸ் சிக்காதான்’’ என்று புகழ்ந்தார்.

‘‘விப்ரோ நிறுவனம் தனது பங்குகளை திரும்ப வாங்கவிருப்பதாக செபிக்கு தகவல் சொல்லி இருக்கிறதே!’’ என்றோம்.

‘‘யெஸ், இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாமா என்று பார்க்கிறது. பங்குகளை திரும்ப வாங்குவதன் மூலம் பங்குகளின் மதிப்பை உயர்த்தவும், போட்டி நிறுவனங்களைவிட தற்போது பின்தங்கியிருக்கும்  தனது பிசினஸை முடுக்கிவிடவும் முடியும் என்று நினைக்கிறது விப்ரோ நிர்வாகம்.

ஆனால், எத்தனை கோடிக்கு பங்குகள் திரும்ப வாங்கப் போகிறது, என்ன விலைக்கு பங்குகளை திரும்ப வாங்கப் போகிறது என்கிற தகவல்களை சொல்லவில்லை. இந்த ஏப்ரல் முதல் டிவிடெண்ட் தொடர்பான புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருப்பதும் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். விப்ரோ பிரேம்ஜியை நம்புகிறவர்கள் இந்த பங்கினை வாங்க முயற்சிக்கலாம்.

நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்ப வாங்குவது இப்போது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 15 நிறுவனங்கள் மொத்தம் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் பங்குகளை திரும்ப வாங்கி இருக்கிறது.

2014 - 15-ல் 20 நிறுவனங்கள் சுமார் 1,909 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியது. அந்த வகையில் பார்த்தால், கடந்த நிதி ஆண்டில் கொஞ்சம் குறைவாகவே பங்குகள் திரும்ப வாங்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

‘‘கடந்த மார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?’’ என்று வினவினோம்.

‘‘கடந்த ஐந்து காலாண்டுகளை ஒப்பிடும்போது, முடிந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்றாகவே இருக்கும் என பல பங்கு தரகு நிறுவனங்களின் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஏற்றுமதியை அதிகம் சார்ந்திருக்கும் ஐடி, பார்மா, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இவை தவிர, டெலிகாம், சிமென்ட் நிறுவனங்களின் லாபமும் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார் உற்சாகமாக.

‘‘ஐபிஓ முறைகேட்டில் ஈடுபட்டதற்காக சில நிறுவனங்களுக்கு செபி தடை விதித்திருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘ஐபிஓ வந்த எட்சர்வ், சிஎம்டி உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு, செபி மூன்று ஆண்டுகள் வர்த்தகம் செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. ஐபிஓ பதிவுக்கான தகவல்களை ஆவணமாகச் சமர்ப்பிக்கத் தவறியதால், அவற்றுக்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் புரமோட்டர் களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்