திருச்சியில்... களைகட்டிய பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு!

மு.சா.கெளதமன்

திருச்சியில் ஏப்ரல் 10-ம் தேதி  காலை முதல் மதியம் வரை அறிமுக பங்குச் சந்தை பயிற்சி வகுப்பை நடத்தியது நாணயம் விகடன்.

அதில் எக்ட்ரா பயிற்சி மையத்தின், முதன்மை செயல் அதிகாரி மற்றும் பங்குச் சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளித்தார். திருச்சி, சேலம், விருதுநகர், சீர்காழி, மன்னார்குடி, ஓசூர், மதுரை, திருநெல்வேலி என்று தமிழகத் தின் பல பகுதிகளிலில் இருந்தும் வாசகர்களும், முதலீட்டாளர்களும், டிரேடர்களும் தங்களின் பங்குச் சந்தை அறிவைப் பட்டைத் தீட்டிக்கொள்ள வந்திருந்தனர்.

பங்கு வெளியீடு முதல் வர்த்தகம் வரை!


அந்த அரை நாள் பயிற்சி வகுப்பில் பங்குகள் எப்படி வெளியிடப்படுகின்றன, யார் வெளியிடுகிறார்கள், எதற்காக வெளியிடுகிறார்கள், ஒரு நிறுவனம் தனது பங்கை வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அதனைத் தொடர்ந்து பட்டியலிடப்பட்டு எப்படி பங்குச் சந்தையில் வர்த்தகமாகத் தொடங்குகிறது போன்ற அடிப்படை விஷயங்களிலிருந்து நிதானமாகத் துவங்கியது பயிற்சி வகுப்பு.

நம் வளர்ச்சியில் வளரும் எஃப்ஐஐ!

அதனைத் தொடர்ந்து நம் இந்திய நிறுவனங்களில் வெளி நாட்டு முதலீட்டாளர் களின் பணம் எவ்வளவு இருக்கிறது, அதாவது, நம் இந்தியப் பொருளா தாரம் மற்றும் இந்திய நிறுவனங் களின் வளர்ச்சியை எப்படி வெளி நாட்டவர்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள், அவர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுப்பதால், நம் சந்தை சரிவதற்கு நம் அறியாமைதான் காரணம்  என  உதாரணங்களோடு விளக்கி, நம் பொருளாதார வளர்ச்சியை நாம் பயன்படுத்தி, நம் வளத்தையும், பணத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டு மென்று கூறினார்.

ஃபண்டமென்டல் முக்கியம்!

எஃப்ஐஐகள் எப்படி நம் சந் தையை சரியாகக் கணிக்கிறார்கள் என்றால் அவர்கள் நம் இந்திய நிறுவனங்களின் ஃபண்ட மென்டல்களை கணிக்கிறார்கள்.  அடிப்படையாக நன்றாக செயல் படும் ஒரு நிறுவனத்தின் பங்கு எப்படி இருந்தால் நிச்சயமாக விலை ஏறத்தான் செய்யும். எனவே, ஒரு நல்ல டிரேடர் அடிப்படையில் ஒரு நல்ல முத லீட்டாளராக இருக்கவேண்டியது அவசியம். அதோடு ஃபண்ட மென்டல் நன்றாக இருக்கும் நிறுவன பங்குகளில் வர்த்தகம் மேற்கொள்ளும்போது ஏதிர் பாராத நஷ்டங்களை தவிர்க் கலாம் என்பதையும் விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்