தொடர்ந்து லாபம் தர வாய்ப்புள்ள 5 பங்குகள்!

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், IndusWealth.com

ங்கு முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டும் எனில், ஃபண்டமென்டல்களை அவசியம் கவனிக்க வேண்டும். ஃபண்டமென்டல்களில் கவனிக்க வேண்டிய அம்சங்களில் பல இருக்கின்றன.

இருந்தபோதிலும், ஆர்ஓசிஇ எனப்படும் ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாய்டு (RoCE - Return on capital employed) என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.

பங்கு முதலீட்டில் ஒரு நிறுவனப் பங்கு நல்ல லாபம் தர, அந்த நிறுவனத்தின் ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாய்டு  பார்ப்பது மிக முக்கியம். இந்த ஆர்ஓசிஇ நன்றாக இருந்தால், அந்த நிறுவனம் நன்றாக லாபம் ஈட்டி வருகிறது என்பதோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அர்த்தம்.

ஆர்ஓசிஇ பற்றி விரிவாக பார்க்கும்முன், சில முக்கிய அடிப்படை விஷயங்களை பார்ப்போம். ஒரு நிறுவனம், சட்டப்படி, லாபம் (Profits) ஈட்ட, அதற்கு மூலதனம் (Capital) தேவை.

இந்த மூலதனம் இரு வழிகளில் வரும். முதல் வழி, பங்கு மூலதனம். இது பங்குதாரர்கள் அளிப்ப தாகும். அடுத்த வழி, கடன். அது நிறுவனங்கள், வங்கிகள், இதர தனிநபர்கள் அளிப்பதாக இருக்கிறது. நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பு என்பது பங்கு மூலதனம் மற்றும் கடன்கள் மூலம் திரண்ட நிதியைச் சார்ந்ததாக இருக்கிறது.

நிறுவனம் ஈட்டும் லாபமானது மூன்று முக்கிய பிரிவுகள் மூலம் வெளியேறுகிறது. 1.கடன் தந்தவர்கள் முதலில் லாபத்தில் தங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுகிறார்கள். இது வட்டி போல் வழங்கப்படுகிறது.  
            
2. லாபத்தில் ஒரு பகுதி வரியாக அரசுக்குச் சென்றுவிடுகிறது.

3. கடன்காரர்கள் மற்றும் வரியாக சென்றது போக உள்ள மீதி லாபம் பங்கு  முதலீட்டாளர் களுக்குச் செல்கிறது. ஒரு நிறுவனம், அதன்  மூலத னத்தை எப்படி பயன்படுத்தி இருக்கிறது  என்பதை ஆர்ஓசிஇ மூலம் அறிந்துகொள்ள முடியும்.  இதனை எப்படிக் கணக்கிடுவது எனப் பார்ப்போம்.

ஆர்ஓசிஇ = வட்டி, வரிக்கு முந்தைய வருமானம் / மூலதனம் (RoCE = PBIT / Capital employed, அதாவது, PBIT = profit before interest and tax, Capital employed = short-term and long-term borrowings + shareholders’ equity)

ஆர்ஓசிஇ எப்படிக் கணக்கிடப்படுகிறது என ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். நிறுவனம் ஒன்றின் வட்டி, வரிக்கு முந்தைய வருமானம் ரூ.730 கோடி என வைத்துக் கொள் வோம். இந்த நிறுவனத்தின் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சராசரி கடன் ரூ.365 கோடி யாகவும், பங்கு முதலீட்டாளர் களின் மூலதனம் ரூ.4,310 கோடியாக உள்ளது.

ஆர்ஓசிஇ = 730/ (365+4,310) *100 = (730/4,675)*100 = 15.61%. இந்த சதவிகிதம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த நிறுவனம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது என்று அர்த்தம்.

ஒரு நிறுவனம், அதன் மூலதனத்தில் ஒவ்வொரு ரூபாய் மூலமும் எப்படி லாபம் ஈட்டி இருக்கிறது என்பதை ஆர்ஓசிஇ சொல்லும்.

அதிக லாபம் என்றால் நிறுவனம் மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறது என்பதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்