லாபம் தரும் தொழில்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபேஷன் ஆகிவிட்ட பேக்கரி பிசினஸ்!த.சக்திவேல்

டந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் நவீனமாக மாறிவிட்டது. உணவுப் பழக்கவழக்கமும் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதிலும் ‘ரெடி டு ஈட்’ என தயார் நிலையில் இருக்கும் உணவுகளை சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இது மாதிரி எதிர்பார்க்கிற நகர்ப்புறத்து மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன பேக்கரிகள்.

ஒரு நாளில் ஒரு வேளை உணவுத் தேவையை நிறைவேற்றுவதோடு பேக்கரிகளின் வேலை முடிந்துவிடவில்லை. உதாரணமாக, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கொடுக்க பல வகையான கேக்குகள், பிஸ்கட்டுகளை பேக்கரிகள் தயாரித்துத் தருகின்றன. வீட்டில் குழந்தைகளுக்கு பிறந்த நாள், பெரியவர்களுக்கு திருமண நாள் என பல மறக்க முடியாத நாட்கள் பேக்கரிகள் தயாரித்துத் தரும் கேக்குகளால் இன்னும் சிறப்புமிக்க நாளாக மாறி விடுகின்றன. அது மட்டுமல்ல, நண்பர்களுடன் சென்று தேநீர் அருந்துவதற்கு முன்பு, இனிப்பாகவோ அல்லது காரமாகவோ சாப்பிடுவதற்கு உதவி செய்வதாக இருப்பதும் பேக்கரிகள்தான். 

ஆக, இன்றைய நகர்ப்புறத்து வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட பேக்கரியை ஆரம்பிக்க வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக வைத்திருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சத்தீஸ் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பசுபதியிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்