Zero to Hero 2.0 - 12

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!ஜெ.சரவணன்பயம் இல்லாதவர்களுக்கு தோல்வி இல்லை!தைரோகேர் வேலுமணியின் வெற்றிப் பயணம்

கோயம்புத்தூரில் ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தன் கடின உழைப்பில் படித்து, மும்பைக்குச் சென்றார். இன்று ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை நிறுவி பங்குச் சந்தையிலும் தடம்  பதித்துள்ளார். அவர்தான் தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வேலுமணி. சவால்கள் நிறைந்த மருத்துவத்துறையில் சாதித்த தன் வாழ்க்கைப் பயணத்தை அவரே சொன்னார்.  

“கோயம்புத்தூரில் ஒரு சாதாரண விவசாயியின் மகனாகப் பிறந்தேன். என் அப்பா, காட்டில் வெயிலில் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து, இப்படி நாமும் கஷ்டப்பட கூடாது என்ற பயத்தில்தான் விடா முயற்சியுடன் படித்தேன். அப்போதெல்லாம் பிள்ளை களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே மாட்டார்கள். என் படிப்புச் செலவை நான் விடுமுறையில் தோட்டத்தில் வேலை செய்து சம்பாதித்து சமாளித்தேன்.

பம்பாய்க்கு பயணம்!


எனக்கு கோயம்புத்தூரில் வேலை  கிடைக்கவில்லை. கிட்டதட்ட 50 இன்டர் வியுவில் தோல்வி அடைந்திருப்பேன். எல்லோரும் என்  ஆங்கிலத்தைத்தான் பார்த்தார்களே தவிர, என் அறிவையும் திறமையும் பார்க்கவில்லை. ஆங்கிலம் ஒரு மொழிதான் என்பது அதிகம் படித்த அவர்களுக்கே தெரியவில்லை. தவிர,  படிக்காத ஒருவர் 2000 ரூபாய் சம்பாதிக்க முடிந்த இடத்தில்,  படித்தவர் களால் 200 ரூபாய்கூட சம்பாதிக்க வழியில்லை.

இப்படி ஒரு ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு நான் ஊரிலேயே இருக்க விரும்பவில்லை. மும்பை போனேன். அப்போது எனக்கு 24 வயது. பாம்பே பல்கலைக் கழகத்தில் அறிவியலில் எம்எஸ்சி, வேதியியலில் பிஎச்டி முடித்தேன். நான் மும்பை போய் முதல்ல மொழிகளைக் கற்றுக் கொண்டேன். ஹிந்தி, மராத்தி எல்லாம் கற்றுக் கொண்டேன்.  என் வாழ்க்கையில் 25 வயதுக்குப் பிறகுதான் அதிகமாகக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை.

நானும் என் மனைவியும்!


சில வருடங்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்தேன். பின்னர் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தினால் தொடங்கி யதுதான் இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கும் இந்த தைரோகேர். 1996-ல் ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங் கினோம். நான், என் மனைவி சுமதி இருவர் மட்டும்தான் அப்போது தைரோகேரின் ஊழியர்கள். 

ஜெயிக்க காரணம்!


நான் எதையும் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. என்னிடம் எந்த பேட்டன்ட்டும் இல்லை. எல்லோரும் செய்ததைத்தான் நானும் செய்தேன். ஆனால், அதை உத்தமமாகவும் வித்தியாச மாகவும் செய்தேன். எல்லோரும் பகலில் வேலை செய்தார்கள். நான் இரவில் வேலை செய்தேன். மற்றவர்கள் எல்லா நோய்களுக் கும் டயகனாஸ்டிக் செய்தார்கள். நான் மெட்டபாலிக் நோய்களுக்கு மட்டும் செய்தேன். இந்த ஏரியாவில் எனக்கு நல்ல அனுபவ மிருந்தது. ரஜினி சொல்கிற மாதிரி, என் வழி தனி வழி. யாரையும் காப்பியடிக்கக் கூடாது என்பது பிசினஸில் ரொம்ப முக்கியம்.

மருத்துவத்துறை சவாலானது என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் மருத்துவத் துறையைச் சரியாக புரிந்துகொண்டால் எளிதில் ஜெயிக்கலாம். என்னை இப்போது எல்லோரும் ‘லக்கி மேன்’ என்று சொல்கிறார்கள். அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம், ஆனால், முயற்சியும் கடின உழைப்பும் இல்லாமல், வெறும்  அதிர்ஷ்டத்தினால் நான் ஜெயிக்கவில்லை. 

வால்யூம்தான் என் வலிமை!


வால்யூமில் பிசினஸ் செய்தால் எந்த பிசினஸிலும் ஜெயிக்கலாம். என் விலையை மற்றவர்களைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்காகக் குறைத்தேன். வால்யூம் வந்தது. வால்யூம் அதிகரித்ததால், லாபம் கிடைத்தது. ஒரு பிசினஸ் தோல்வி அடைகிறது என்றால், முக்கிய காரணம் செலவைக் கட்டுப்படுத்த முடியாததுதான். அதை நான் நன்றாகப் புரிந்து கொண்டு செலவைக் குறைத்தேன். குறைவான வருமானமாக இருந்தாலும் மற்றவர்களைக் காட்டிலும் அதிக லாபம் பார்க்க முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்