தமிழகம் இனியாவது தொழிலில் சிறக்கட்டும்!

ஹலோ வாசகர்களே..!

‘‘தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் வெளியேறவில்லை. தமிழகத்தில் நல்ல தொழில் சூழல் நிலவுவதால், வெளியேறிய நிறுவனங்கள்கூட திரும்ப வந்துகொண்டு இருக்கின்றன’’ என்று சொல்லி இருக்கிறார் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். எந்தப் புள்ளிவிவரங்களை வைத்து தொழில் துறை அமைச்சர் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. காரணம், தமிழகத்தில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வேறு மாநிலங்களுக்கு செல்வது அண்மைக் காலத்தில் கொஞ்சம் குறைந்திருக்கலாமே தவிர, முற்றிலுமாக நின்றுவிடவில்லை.

சிறிய அளவில் தொடங்கப்படும் தொழில்களாகட்டும் அல்லது பெரிய முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில்களாகட்டும், இவற்றைத் தொடங்கத் தேவையான பல்வேறு அனுமதிகளை அரசிடமிருந்துதான் பெறவே பல நிறுவனங்கள் போராடி மாய்ந்துவிடுகின்றன. இந்த அனுமதிகளைப் பெற பல மாத காலம் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் நிறுவனங் களுக்கு. மேலும், தொடர்ச்சியான மின் வசதி, நல்ல சாலை வசதி போன்றவை தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் முழுமையாக கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது.

தொழில் தொடங்க அடிப்படையான இந்த வசதிகள் இல்லாத நிலையில், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஆந்திராவுக்கும், தெலங்கானாவுக்கும் செல்கிறார்களே தவிர, தமிழகத்துக்கு வர நினைப்பதில்லை. இப்படி செல்பவர்களை மற்ற மாநிலங்கள் இருகரம் கூப்பி வரவேற் பதுடன், அவர்கள் அங்கு தொழில் தொடங்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, பல்வேறு அனுமதிகளையும் உடனுக்குடன் தந்துவிடு கின்றன. தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களில் தொழில் நடத்துவதால் 25 முதல் 30% செலவு குறைவது தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்