ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து சொத்து வாங்கலாமா?

கேள்வி-பதில்

? ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் சொத்தினை வாங்கலாமா? அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ரகு,


கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்,சென்னை.

“ஆன்லைன் நல்லது, கெட்டது இரண்டு விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு தளம். முதலில் விளம்பரப்படுத்தப்படும் சொத்து, விளம்பரப்படுத்தும் நபர்/நிறுவனம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் அவசியம். ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட சொத்து உங்களை கவர்ந்திருக்கும்பட்சத்தில், விற்பவரிடமிருந்து அந்த சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்புகள் அடங்கிய சி.டி.யை கேட்டுப் பெறலாம். அல்லது ஆவணங்களின் நகல்களைப் பெற்று அதனை வழக்கறிஞர் மூலமாக, சட்டக் கருத்துரை (Legal Opinion), பெற்ற பின்பு, கிரய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இவற்றைப் பெற முன்பணமாக சில லட்சங்களோ, சில ஆயிரங்களோ நீங்கள் செலுத்த வேண்டும் என்று வாங்கும் நபரோ, நிறுவனமோ, கட்டாயப்படுத்தினால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். இவ்வாறான ஆன்லைன் வியாபார உத்திகளில், சொத்து சம்பந்தப்பட்ட உரிமையாளரை நேரடியாகச் சந்திக்க வாய்ப்பே தராமல், இடைத்தரகர்கள் போல விளம்பரப்படுத்திய நபரோ /நிறுவனமோ செயல்படுவது உண்டு.

இதுபோன்ற சூழ்நிலையில் (சொத்தின் உரிமையாளருடன்) நேரடித் தொடர்பை, ஏற்படுத்திக் கொள்ளுதல் முற்றிலும் சிறந்தது. அப்போதுதான் சொத்து குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெளிவு பெற இயலும். சில வகை விளம்பரங்களில்,  லீகல் ஒப்பீனியன், வில்லங்கச் சான்றிதழ் இலவசம் என ‘ஹை லைட்’ செய்யப்பட்டிருக்கும். சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழ் என்பது, தமிழக பதிவுத் துறையின் வலைத்தளத்தில் (http://www.tnreginet.net/) கிடைக்கப் பெறுவது. யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்