45 வயதில் இரண்டாவது வருமானம்!

ஈஸி இன்வெஸ்ட்மென்ட் கைடுலைன்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ம்மில் பலருக்கு 45 வயதில் பல வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். செய்யும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்யத் தோன்றும். நகரத்தில் இருக்கும் நரக வாழ்க்கையை விட்டுவிட்டு சொந்த கிராமத்துக்குச் சென்று நிம்மதியாக செட்டிலாகத் தோன்றும். பார்க்கும் வேலைக்கு பை பை சொல்லி விட்டு, பிசினஸ் செய்யவேண்டும் என்கிற வெறி தோன்றும். பிசினஸில் வெற்றி காணாதவர்கள், தொழிலை மூடிவிட்டு வேலைக்குச் செல்லலாமா என்று நினைப்பார்கள். இன்னும் சிலரோ வளைகுடா நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கலாமா என்று எண்ணுவார்கள்.

இன்னும் சிலர், அந்த வயதில் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் என்ன செய்து வருமானத்தைப் பெருக்கலாம் என்று நடுராத்திரியில் யோசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர், திடீரென்று நன்றாக சென்றுகொண்டிருந்த வேலையிலிருந்து வெளியேற்றப்படலாம். இன்னும் சிலருக்கு உச்சத்தில் சென்று கொண்டிருந்த தொழிலில் தொய்வு ஏற்படலாம். இதுபோல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் 45 வயது என்பது ‘L’ போன்ற திருப்பங்களைச் சந்திக்கும் தருணமாகும்.

இது போன்ற திடீர் திருப்புமுனை களைச் சந்திப்பதற்கு அந்த வயதில் நமக்கு இரண்டாவது வருமானம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள்தான் நம்மில் பலர். கிடைக்கிற ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து செலவு செய்வதில் எத்தனை சிக்கல், குடும்ப உறவுகளுக்குள் எத்தனை சண்டை சச்சரவு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்