ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மு.சா.கெளதமன்

மீபத்தில் சில நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்கிக் (பைபேக்) கொள்வதாக அறிவித்தன. இப்படி பங்குகளை திரும்ப வாங்குவதால், முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்ன லாபம், பைபேக்கின்போது முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்.எம்.ஆர் ஷேர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குச் சந்தை  நிபுணர் எஸ்.லெட்சுமணராமனிடம் கேட்டபோது விரிவாக விளக்கினார்.

ஷேர் பைபேக் என்றால்...?

ஒரு நிறுவனம் அதனுடைய பங்குகளுக்கு தானே ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து, அதனிடம் இருக்கும் உபரிப் பணத்தைக் கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கினால் அதற்கு பெயர் ஷேர் பைபேக். இதற்கு முதலில் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்று, பின்னர் செபியிடமும், பங்குச் சந்தை களிடமும் அனுமதி வாங்க வேண்டும்.

எப்படி பைபேக் செய்யப்படும்?

பொதுவாக இரண்டு விதத்தில் பைபேக் செய்யப்படும்.  1.  முதலீட்டாளர்களிடம் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் பைபேக் அறிவிப்பை தெரிவித்து பங்குகளை வாங்குவது.     2 . பங்குச் சந்தையில் நேரடியாக வாங்குவது.  இந்த இரண்டு முறைக்கும் பொது அறிவிப்பு செய்வார்கள். பைபேக்குக்கான விலையை நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கும். இப்படி பைபேக் அறிவிக்கப்படும் போது பங்குகளை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 

இனி நிறுவனங்கள் எப்போது எல்லாம் ஷேர் பைபேக் செய்யும் என்பதை பார்க்கலாம்.

அதிகப்படியான பணம்!

ஒரு நிறுவனத்திடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இல்லை என்றால், அனுபவம் இல்லாத துறைகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அந்த பணத்தினை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது நல்லது என்கிற அடிப்படையில் ஒரு நிறுவனம் பைபேக் செய்யும். பொதுவாக, இப்படி ஒரு நிறுவனம் அதனிடம் இருக்கும் தொகையை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பைபேக் அறிவிக்கிறது என்றால் அந்தப் பங்குகளை விற்றுவிடுவது நல்லது. பங்குகளை திரும்ப வாங்கும் நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட்களை ஆராய்ந்து, அதில் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்டுக்கோ, புதிய தொழிற்சாலைகளை கட்டுவதற்கோ அல்லது விரிவாக்கத்துக்கோ பணம் ஒதுக்கவில்லை எனில், தாராளமாக பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்