தொடர்ந்து ஜொலிக்குமா - மைக்ரோ ஃபை னான்ஸ் துறை?

ஷியாம் சேகர் நிறுவனர், ஐ தாட் ஃபைனான்ஷியல் கன்சல்டிங்

மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் - இன்று பங்குச் சந்தையில் எல்லோரும் வாங்க விரும்பும் பங்குகளில் முதல் இடம் வகிக்கும் ஒரு துறை. சமீப கால  ஐபிஓ-களில் அதிக லாபம் ஈட்டிய பங்குகள் இந்தத் துறை சார்ந்தே உள்ளன. உஜ்ஜிவன் மற்றும் எக்விடாஸ் ஆகிய நிறுவனங்கள் சந்தையில் பெரும் லாபம் ஈட்டின. இன்றைய முதலீட்டாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்த இந்தத் துறையின் பங்குகளை இப்போது வாங்கலாமா?, வங்கிகளின் பங்கு மதிப்பீட்டை விட அதிகமாக இன்று சந்தையில் விற்கும் இந்தத் துறைப் பங்குகளின் நெடுங்கால வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கும் நபர்கள், குறுந்தொழில் நடத்துவோர், சுயவேலை செய்து பிழைப்போர், அமைப்பு  சாரா தொழில்கள் செய்வோர் என இப்படி வங்கிகளின் பார்வை படாத மக்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள்தான் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள். 

ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் ஐபிஓ-வில் தனது பங்குகளை 985 ரூபாய்க்கு 2010-ம் ஆண்டு விற்றது. இந்தப் பங்குகள் சரிந்து 2012-ம் ஆண்டு ரூ.54-க்கு விற்கப்பட்டன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
 
இதற்கு முக்கிய காரணம், இந்த நிறுவனம் தந்த கடன்களை திரும்ப வசூல் செய்ய இயலாமல் போனதுதான். ஆந்திராவில் இந்த நிறுவனம் தந்த கடனை திரும்ப வசூலிக்க ஆந்திர அரசே பல இடையூறுகளைச் செய்தது.

ஆனால், முதலீட்டாளர்கள்  எளிதில் மறக்கும் பழக்கமுள்ள வர்கள். மீண்டும் இதே பங்குகளின் விலையைப் பெருவாரியாக உயர்த்தி, இன்று பாரத் ஃபைனான்சியல் இன்க்ளூசன் என்ற பெயரில் ரூ.892க்கு சந்தையில் விற்பனை ஆகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்