நாணயம் லைப்ரரி: சரித்திரம் படைக்கும் ‘சூப்பர் – 30’

சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகத்தின் பெயர்: சூப்பர் 30 – ஆனந்த் குமார்

ஆசிரியர்: பிஜு மாத்யூ

பதிப்பாளர்: பெங்குவின் இண்டியா

ஐடி என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு தெற்கே 250 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் `கோட்டா’ என்கிற நகரம்தான். 1990-களின் இறுதி ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட கோச்சிங் வகுப்புகள் இன்று ஆலமரமாக வளர்ந்து லட்சக்கணக்கான மாணவர்களை ஈர்க்கக் கூடியதாகவும், கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டக்கூடிய தாகவும் பரிணமித்து ஒரு மிகப் பெரிய தொழில் துறையாக வளர்ந்திருக்கிறது. இதன் முன்னோடி பன்சால் ஆவார்.

இது ஒரு புறமிருக்க, ஏழை மாணவர்களுக்கு எட்டக்கனியாக இருக்கிற ஐஐடி – கனவை நனவாக்கும் பொருட்டு பீஹாரைச் சேர்ந்த ஆனந்த் குமார் 2002- ம் ஆண்டு ‘சூப்பர் 30’ என்கிற பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்து, யாருடைய நிதி உதவியும் இல்லாமல் கடந்த 14 ஆண்டுகளாக பல சிரமங்களுக்கு இடையில் நடத்தி சிகரம் தொட்டு வருகிறார். இவர் குறித்தும், சூப்பர் 30 குறித்தும் எழுதப்பட்ட புத்தகம்தான் ‘சூப்பர் 30 – ஆனந்த் குமார்.’ இதை எழுதியிருப்பவர் கனடாவில் மன உளவியல் ஆலோசகராக இருக்கும் டாக்டர் பிஜு மாத்யூ.

கடந்த 14 ஆண்டுகளில் ‘சூப்பர் 30’ – ல் பயிற்சி பெற்ற 420 பேரில், 361 மாணவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள ஏதோவொரு ஐஐடி–யில் சேர்ந்திருக்கின்றனர். 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 90 பேரும் ஐஐடியில் சேர்ந்ததன் மூலம் `ஹாட்ரிக்’ சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் சூப்பர் 30 லிம்கா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறது. சாமன்யனான ஆனந்த் குமாரி னால் இது எப்படி சாத்தியம்?

தான் ஆசைப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் மேற்படிப்புப் படிக்க இடம் கிடைத்தும் தந்தையின் இழப்பு, நிதிப் பற்றாக்குறை, அரசியல்வாதி களின் வஞ்சனை என பல பிரச்னைகளால் அதைத் தொடர முடியாவிட்டாலும் தனது லட்சியத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்  43 வயதான இந்த ஆனந்த் குமார். 

பாட்னா நகரத்தின் புறநகர் பகுதியில் உள்ள சிறிய மாவட்டம் மித்தாப்பூர் இங்குள்ள சேரி ஒன்றில் ராஜேந்திர பிரசாத்துக்கும், ஜெயந்தி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் ஆனந்த் குமார். ராஜேந்திர பிரசாத், ரயில்வே மெயில் சர்வீஸில் ஒரு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்