கேட்ஜெட்ஸ்

கார்த்தி

சோனி SRS-X11 புளுடூத் ஸ்பீக்கர்! (Sony SRS-X11 Bluetooth Speaker)

ஒலித்திறன் என்றாலே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சோனிதான். இந்த முறை மிகவும் சிறிய அளவில், அட்டகாசமான லுக்கில் ஒரு ஸ்பீக்கரை வெளியிட்டு இருக்கிறார்கள். 215 கிராமில் டைஸ் போன்ற டிசைனில், அழகாக காட்சி தருகிறது சோனி SRS-X11. ரப்பர் ஃபினிஷிங்கில், பல நிறங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது. இதில் இருக்கும் add ஆப்சனின் மூலம், அடுத்த ஸ்பீக்கரை கனெக்ட் செய்துகொள்ளலாம். NFC, பவர் பட்டன், மொபைலை கனெக்ட் செய்ய பட்டன், வால்யூம் பட்டன்கள் என வாடிக்கையாளர்கள் விரும்பும் பல பட்டன்களை கொடுத்து இருக்கிறார்கள். 2.40 இன்ச் அளவில் இருக்கும் இந்த ஸ்பீக்கரில் இருந்து, 10W அளவிலான சத்தம் வருகிறது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

இதன் பேட்டரி திறன் மூலம் 10 மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம். கைக்குள் அடக்கமாக மிகவும் சிறியதாக இருப்பதால், நாம் இதை எடுத்துக்கொண்டு செல்ல எளிதாக இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும், ஸ்பீக்கர் ஒலி, வெளியாவது போல், வடிவமைப்பு செய்யப்பட்டு இருப்பதால், இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

சோனி வலைதளத்தில் 5490 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் தளங்களில் 4500 ரூபாய்க்கு, இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது. ஆனால், சோனி நிறுவனம், இதன் விலையை சற்று குறைத்தால், அதிகமானோரை இந்த ஸ்பீக்கர் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்