கம்பெனி ஸ்கேன் : கெடில்லா ஹெல்த்கேர் லிமிடெட்!

(NSE SYMOBL: CADILAHC)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

முதல் தலைமுறை தொழில்முனைவோரான ராமன்பாய் பட்டேல் என்பவரால் 1952-ம் ஆண்டு ஒரு தொழில் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு மருந்து தயாரிக்கும் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழும் பார்மெச்சூட்டிக்கல் நிறுவனம் கெடில்லா ஹெல்த் கேர் லிமிடெட்.

1995-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் மறுசீரமைப்பில் இந்த நிறுவனம் ஜைடஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக மாறியது. 1995-ம் ஆண்டு 250 கோடியாக இருந்த கெடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்தின் வர்த்தகம் 2015-16 -ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.9,800 கோடி  அளவினை எட்டியிருந்தது. அறுபது வருடத்துக்கும் மேலான அனுபவத்தினையும், அமெரிக்காவில் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் ஜெனரிக் மருந்து வகைகளில் ஒன்பதாவது பெரிய மருந்து வகைகளைக் கொண்டிருக்கும் நிறுவனம் என்ற வகையிலும், இந்தியாவில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம்.

மருந்துகள் தயாரிப்பில் நீண்ட நெடும் காலமாக செயல்பட்டு வரும் இந்த  நிறுவனம்  தொடர்ந்து தனது சந்தைப் பங்களிப்பை அதிகரித்துக்கொள்வதிலும், புதுப் புது மருந்துகள் தயாரிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. கடுமையான நோய்களுக்கான மருந்துகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் என்ற இரண்டு வகை மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்துவரும்  இந்த நிறுவனம், இந்த இரண்டு வகை மருந்துப் பிரிவிலும் நல்ல சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.  கார்டியோ வாஸ்கு லர்(இருதய சம்பந்தப்பட்ட), கேஸ்ட்ரோ இண்டெஸ்ட்டினல்ஸ் (குடல் இரைப்பை சம்பந்தப்பட்ட) மற்றும் பெண்களுக்கான உடல் நலம் பேணுதல் என்ற மூன்று மருந்துகள் தயாரிப்பு பிரிவுகளில் முன்னணி நிலை வகிக்கிறது இந்த நிறுவனம். தவிர, ரெஸ்பிரேட்டரி (சுவாச சம்பந்தப்பட்ட), டெர்மட்டாலஜி (தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்), பெய்ன் மேனேஜ் மென்ட் (வலி நிவாரணம்), ஆன்ட்டி இன்ஃபெக்டிவ் (நோய் தொற்றுக்கெதிரான/தடுக்கும் மருந்துகள்) மருந்துகள் என ஏனைய மருந்து வகைகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் எல்டிஎல் கொழுப்பு அதிகரிப்புக்கான மருந்துகளில் கெடில்லா ஹெல்த் கேர் நிறுவனத்தின் லிப்பக்லின் எனும் மருந்தே உலகளாவிய அளவில் இந்திய நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. அடாகுமுமேப் எனும் பயோசிமிலரை உலகளாவிய அளவில் விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். அதேபோல், இந்திய அளவில் 300 பிராண்ட் மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

 இருபது பயோசிமிலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் 19,000 பணியாளர்களை பணியில் அமர்த்தியும் உள்ளது. இந்தப் பணியாளர்களில் சுமார் 1,200 பேர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வசதியில் வேலை பார்க்கிறார்கள். என்சிஇ, ஏபிஐ, ஜெனரிக் ஃபார்மு லேஷன், பயோசிமிலர்கள் மற்றும் வேக்சின்கள் தயாரிப்பில் ஆராய்ச்சி செய்வதற்காக ஒன்பது இடங்களில் ஆராய்ச்சி வசதிகளைக் கொண்டிருக் கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் 1,190 காப்புரிமை களுக்கான உரிமையைக் கோரியுள்ளது. உலகளாவிய அளவில் 30 உற்பத்தி வசதியை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் சுமார் 15 பில்லியன் அளவிலான எண்ணிக்கையில் மாத்திரைகளை உற்பத்தி செய்துவருகிறது.  
தொழிலைப் பொறுத்தவரை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கான ஏற்பாடாக நான்கு வித பிரிவுகளில் இந்த நிறுவனம் தன் கவனத்தினை கொண்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் ஃபார்முலேஷன் வியாபாரத் தினை அதிகப்படுத்தவும், ஐரோப்பியன் யூனியனில் வர்த்தகத்துக்கான ஃபார்மு லேஷன், கன்ஸ்யூமர் வெல்னெஸ், மிருகங்களுக்கான மருந்து வகைகள், ஆக்டிவ் பார்மச் சூட்டிகல் இன்க்ரிடியண்ட் எனும் ஏபிஐக்கள் தயாரிப்பு, கூட்டணிகள் போன்றவற்றில் நாட்டம் செலுத்தி வருகிறது..

புதிய வகை தொழிற்பிரிவு களான பயோசிமிலர்கள், வேக்சின்கள், புதிய கெமிக்கல் வகையறாக்களை (என்சிஇ) கண்டறிதல் போன்றவற்றிலும் தனது கவனத்தினை பதித்து வருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்