தடுமாறும் ஐ.டி செக்டார்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஜெ.சரவணன்

மில்லினியல் தலைமுறை இளைஞர்களுக்கு சிம்மசொப்பன மாக திகழ்ந்து, இந்தியப் பொருளா தார வளர்ச்சியின் கதவுகளைத் திறந்துவிட்ட துறை தகவல் தொழில்நுட்பத் துறை. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் துறையாக ஐ.டி துறை வளர்ந்தது. இந்திய ஜிடிபியில் 1998-ல் 1.2 சதவிகிதமாக இருந்த ஐ.டி துறையின் பங்கு தற்போது 9.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஆனால், தற்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள். எந்த நேரத்தில் வேலை பறிபோகுமோ என்ற கவலை இவர்களை வாட்டி வதைக்கிறது. ஏனெனில் ஐ.டி நிறுவனங்களின் நிதிநிலை எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி அடையாததால், நிதி நெருக் கடியைச் சமாளிக்க சீரமைப்பு என்கிற பெயரில் ஆட்குறைப்பை மட்டுமே செய்துவருகின்றன.

ஐ.டி துறைக்கு என்னதான் ஆயிற்று, கடந்த சில காலாண்டு களாக ஐ.டி நிறுவனங்களின் வருவாய் ஏன் அதிகரிக்கவில்லை, ஐ.டி துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ரேட்டிங் நிறுவனமான இக்ராவின் மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசனி டம் கேட்டோம். விளக்கமாக சொன்னார் அவர்.

“இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவும், மற்ற நாடுகளைக் காட்டிலும் மலிவாக பணியாளர் கள் கிடைப்பதாலும் ஐ.டி துறை யில் உலக அளவில் இந்தியாதான் முன்னிலை வகித்து வருகிறது. இந்திய ஐ.டி துறை ஈட்டிய வருமானம் 2014-ல் 114 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2015-ல் 23.72% அதிகரித்து 146 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியா உலக நாடு களுக்கு ஐ.டி. தொடர்பான வேலைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் மட்டுமே 80 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்  ஈட்டுகிறது. ஐடி துறைக்கு ஆகும் செலவு, அமெரிக் காவைக் காட்டிலும் இந்தியாவில் 3-லிருந்து 4 மடங்கு குறைவு.

இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் வாடிக்கையாளர் கள் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை மிச்சப்படுத்தியுள் ளனர். இதன் காரணமாக உலகின் பல நாடுகள் அவர்களின் 70 சத விகித ஐ.டி சேவைக்கு இந்தி யாவையே நாடுகின்றன. 2015-ல் இந்திய மொத்த ஏற்றுமதியில் ஐ.டி துறையின் பங்கு 56.12% பிபிஎம் துறையின் பங்கு 23.46%. 

ஆனால் தற்போது ஐ.டி துறை தடுமாற்றத்தில்தான் இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் அடைந்த அதிவேக வளர்ச்சி தற்போது குறையத் தொடங்கி யிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு களில் இந்திய ஐடி மற்றும் பிபிஎம் துறை ஆண்டு கூட்டு வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும்போது 15 சதவிகித வளர்ச்சியை அடைந் திருக்கிறது. ஆனால், 2020-ல் இந்திய ஐ.டி துறை 9.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிக வேலை வாய்ப்பு அளிப்பதால், இந்தத் துறைக்கு பல சலுகைகளை அளிக்கிறது இந்திய அரசாங்கம். ஆனாலும் ஐ.டி நிறுவனங்கள் வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியாமல் திணறுகின்றன. இந்தியாவின் மொத்த ஐ.டி துறையில் 36% பங்கு வகிக்கும் முன்னணி ஆறு நிறுவனங்கள்கூட எதிர் காலத்தைப் பற்றிய தெளிவில்லா மல் இருக்கின்றன. இந்தியாவில் ஐ.டி துறை நிறுவனங்களின் எண் ணிக்கை 1990-களில் இருந்ததைக் காட்டிலும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் போட்டியும் அதிகரித்தது.

டிஜிட்டல் மயத்தினாலும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதாலும் இந்திய ஐ.டி நிறுவனங்கள் லாபமடைந்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தகம்,  சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்றவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் தொடர்ந்து ஐ.டி துறை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை. நிதிநிலை ரீதியில் இவை இப்போது வரை அதிகளவிலான இழப்புகளை அடையாததால், நன்றாக செயல்பட்டு வருவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றின் சமீப ஆண்டுகளின் காலாண்டு முடிவு களைப் பார்த்தால், இவற்றின் லாபம் அதிகரிக்காமல் ஒரே நிலையிலேயே தொடர்கிறது.  

மேலும், கடந்த 20 வருடங்களாக ஐ.டி நிறுவனங்கள் லட்சக்கணக்கானவர்களை வேலைக்கு எடுத்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்களைக் குறைத்து வருகின் றனர். அதிகரித்த போட்டியின் காரணமாக ஆட்களை அதிகள வில் எடுத்து தங்களது இமேஜை கூட்டிக் கொண்டன. மேலும், திறமையான நபர்களை தக்க வைத்துக்கொள்ள அதிக சம்பளம் கொடுத்தன. இதனால் செலவீனம் அதிகரித்து லாபம் குறைந்தது. மேலும், தங்களது தொழிலை தொடர்ந்து அதிகரிக்க ஈடுபாடு காட்டாத தால், திறமையற்றவர்கள் என்று ஆட்களைக் குறைக்க தொடங்கின.

ஐடி துறையின் மிக முக்கிய மான வேலையாகக் கருதப்படுவது கோடிங். ஆனால், இப்போது கோடிங் செய்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. ஏராள மான கோடிங் சாஃப்ட்வேர்கள் வந்துவிட்டன. ஸ்டார்ட் அப் கலாசாரம் உலகம் முழுக்க அதி கரித்து வருவதால் எல்லோரும் சாஃப்ட்வேர் நிறுவனங்களைத் தொடங்கிவிடுகின்றனர். உலக அளவில் ஐ.டி துறைக்கான தேவை இதனால் குறையத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு துறையிலும் ஆட்டோ மேஷன் எனச் சொல்லப்படுகிற இயந்திரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. ஐ.டி துறையின் பெரும் பாலான செயல்பாடுகளுக்குள் ஆட்டோமேஷன் ஏற்கெனவே நுழைந்துவிட்டது.

இது மட்டுமில்லாமல் பிரெக்ஸிட் தாக்கமும் இந்திய ஐ.டி துறையைக் கணிசமாக பாதிக்கும். பிரெக்ஸிட்டின் மிக முக்கிய பிரச்னையே குடியேற்றம் தான். வெளிநாடுகளில் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் ஐ.டி நிறுவனங்கள் தான் என்பதால் அவற்றுக்குத்தான் பாதிப்பு அதிகம் இருக்கும்.

இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஒரே இரவில் ஒன்றாக உருவா னவை அல்ல. ஆனால், அவற்றை சமாளிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஐ.டி நிறுவனங்கள் இறங்கவில்லை. முக்கியமாக இன்ஃபோசிஸ். இதனால் நாஸ்காம் கணித்த வளர்ச்சியைக்கூட எட்ட முடிய வில்லை. இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் வெளியான அன்று, அந்த பங்கின் விலை 8% குறைந்தது. காரணம், இன்ஃபோசிஸ் கடந்த சில மாதங்களில் எந்தவொரு புதிய புராஜக்டையும் பெறாததால் வருமானம் குறைந்தது. சமீபத்தில் விஷால் சிக்கா, தனது  ஊழியர்களிடம் “நம்மால் அடைய முடிந்த வளர்ச்சியைக்கூட நாம் அடைய வில்லை. நான் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அதன் பிறகே தங்களது குழுவில் சில மாற்றங்களைச் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்