கவிழ்ந்த யாகூ... கற்பிக்கும் பாடங்கள்!

கார்த்தி

ணையத்தையும், இ-மெயிலையும், சர்ச் இன்ஜினையும் இந்த உலகுக்கு பிரபலப்படுத்தியதில் யாகூக்கு முக்கியமான பங்கு உண்டு. 2000-க்கு முன்பு இ-மெயிலைத் தொடங்கியவர்கள் நிச்சயம் யாகூவில்தான் தொடங்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட யாகூ இன்றைக்கு வெறும் 4.8 பில்லியன் டாலருக்கு விலை போயிருக்கிறது. இவ்வளவு கூட தந்திருக்கத் தேவை யில்லை என்று சொல்பவர்களும் உண்டு.

கடந்த இருபது ஆண்டுகளில் பல பெரும் சாதனையை செய்த யாகூ, பல இமாலயத் தவறுகளையும் செய்ததன் மூலம், நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்துவிட்டு சென்றிருக்கிறது.

1994: யாகூ என்னும் இணைய சர்ச் இன்ஜின் ஆரம்பிக்கப்பட்டது!

1998: யாகூவிடம் கூகுளை ஆரம்ப நிலைப் படிவமான பேஜ் ரேங்க்கை 1 மில்லியன் டாலருக்கு விற்க முயன்றனர் கூகுளின் உரிமை யாளர்களான லேரி பேஜும், செர்ஜெரி ப்ரினும். ஆனால், யாகூ அதனை பெரிதாக கண்டுகொள்ள வில்லை

2000: யாகூவின் மதிப்பு 125 பில்லியன் டாலராக இருந்தது

2002: கூகுளை 3 பில்லியன் டாலருக்கு, யாகூ விலைக்குக் கேட்டது. கூகுள் ஒப்புக்கொள்ள வில்லை. 5 பில்லியன் என்றால் டீல் ஓகே என்றது. 5 பில்லியன் கொடுத்து கூகுளை வாங்குவதா என யாரோ யாகூக்கு அறிவுரை கூற, அதற்கு நோ சொல்லிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்