பங்குச் சந்தை: தமிழர்களுக்கு மட்டும் தயக்கம் ஏன்?

சோ.கார்த்திகேயன்

மிழகத்தைப் பொறுத்தவரை, தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் இந்திய அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான டீ மேட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களின் பட்டியலில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் என்று சொல்லப்படும் சிடிஎஸ்எல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் டீமேட் அக்கவுன்ட் நிலவரம் குறித்தும், பங்குச் சந்தையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சிடிஎஸ்எல், சென்னை மேலாளர் வாசுதேவனிடம் கேட்டோம். அவர் விரிவாக சொன்னார்.

பங்குச் சந்தை ஒரு சூதாட்டமா?


“பங்குச் சந்தை என்றாலே சூதாடும் இடம் என்றுதான் பலர் தவறாக நினைக்கிறார்கள். இதற்குக் காரணம், மக்களிடம் இருக்கிற பேராசைதான். டே டிரேடிங் என்கிற தினசரி வர்த்தகத்தில் சூதாட்ட மனநிலையில் சந்தையை அணுகுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நஷ்டம் வருகிறது.

1994-ம் ஆண்டு வரை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்தனர். ஒரு பங்கை வாங்கி அதை டெலிவரி எடுப்பதற்கே ஒரு மாதம் ஆகும். இதனால் பங்கு விலை ஏறுவதும், இறங்குவதும் யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், எல்லாம் ஒரே நாளிலேயே நடந்துவிடுகிறது. விலை எப்படி ஏறுகிறது அல்லது இறங்குகிறது என்பதை நாமே கணினியில் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே, பங்குச் சந்தையை இனிமேலும் சூதாட்டம் என்று சொல்வது சரியாக இருக்காது.

பிரபலமாகும் டே டிரேடிங்!

முன்பெல்லாம் பங்குச் சந்தைக்கு வர குறிப்பிட்ட அளவு பணம் தேவைப் பட்டது; குறைந்தபட்சமாக 50, 100 ஷேர் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது; ஆனால், இன்று அப்படி இல்லை. இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் ஒரு பங்கை வாங்கி விற்பனை செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது.

மேலும், ஆன்லைன் வர்த்தகம் வந்தபிறகு டே டிரேடிங் வர்த்தகத்தை தவறாகப் புரிந்துகொண்டு ஒரே நாளில் பணத்தை இரண்டு மடங்காக பெருக்கிவிடலாம் என்று நினைத்து லட்சக் கணக்கில் பணத்தை இழந்தார்கள் சிலர். இதுபோன்றவர்கள்தான் பங்குச் சந்தை என்பது மோசம்; இதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்லி வருகின்றனர். இதில் சில பேர் பங்குச் சந்தையில் இழந்த நஷ்டத்தை மீட்கிறேன் என்று நினைத்து பணத்தை மட்டுமல்ல, வீடு, நகை என பலவற்றையும் இழந்துள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்டதை பார்க்கும் பலரும் பங்குச் சந்தை என்றாலே பணம் இழக்கும் இடம் என்று தவறாக புரிந்துகொண்டு விடுகின்றனர். பங்குச் சந்தையில் குறுகிய கால நோக்கில் போடப் படும் பணம் பறிபோகவே வாய்ப்புண்டு. இது முக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை.

பெருகும் டீமேட் அக்கவுன்ட்!

தமிழகத்தில் டீமேட் கணக்கு தொடங்கும் எண்ணிக்கை கடந்த காலத்தைவிட இப்போது அதிகரித்து வருகிறது. சந்தையில் சில நிறுவனங்கள் முதலீட்டாளர் களை கவர்வதற்காக ‘ஜீரோ புரோக்கரேஜ்’ தந்து வருவதால் டீமேட் கணக்கு தொடங்கு பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தவிர, பங்குச் சந்தை குறித்த விழிப்பு உணர்வு மெல்ல அதிகரித்து வருவதால், பல முதலீட்டாளர்கள் டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் டீமேட் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை 7  - 10% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது. இப்போது டீமேட் கணக்கு தொடங்குபவர்களில் 25 வயது முதல் 30 வயதினர் அதிகளவில் இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக 60 வயதினருக்கு மேலே உள்ளவர்கள்தான் அதிகளவில் டீமேட் கணக்கைத் தொடங்கு கின்றனர். இவர்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று நினைத்து  தொடங்குகின்றனர்.

தமிழக கலாசாரம்!

மகாராஷ்டிரா, குஜராத்,  உத்தரப் பிரதேசத்தைவிட குறைந்த அளவிலேயே தமிழகத்தில் டீமேட் கணக்கு தொடங்கக் காரணம், நம் கலாச்சாரம்தான். தென் இந்தியாவைப் பொறுத்தவரை, படிப்பு, வேலை, கல்யாணம், குடும்பம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஆனால், வட இந்தியர்கள் வேலைக்குச் சென்று பணத்தை ஈட்டுவதைவிட, தொழிலில் ஈடுபடும் அதே நேரத்தில் பங்குச் சந்தை முதலீடு மூலம் பணத்தைப் பெருக்கு வதையே பழக்கமாக வைத்தி ருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்