லாபம் தரும் தொழில்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எப்போதும் வாய்ப்புள்ள நோட் புக் பிசினஸ்! த.சக்திவேல்

ம்முடைய வாழ்க்கை முறை கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று  முற்றிலும் டிஜிட்டல் மயமாகிவிட்ட போதிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் படித்த புத்தகங்களில் இருக்கும் பகுதிகளை, பள்ளி, கல்லூரியில்  படித்த பாடங்களை, வீட்டின் அன்றாடக் கணக்கு வழக்குகளை எழுதி வைக்க நோட்டுப் புத்தகம் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.

உணவு, உடை, இருப்பிடத்தைப் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடிப்படையான தேவையாக இந்த நோட்டுப் புத்தகம் இருக்கிறது.

இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எல்கேஜி முதல் கல்லூரி வரையில் பாடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு நோட்டுப் புத்தகம் மாணவர்களுக்குத்  நிச்சயம் தேவையாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல், ஓவியம் வரைவதற்கு, கையெழுத்தை அழகாக்கும் பயிற்சிக்கு என்று பல்வேறு விதமான காரணங்களுக்காக நோட்டுப் புத்தகங்கள் தேவையாக இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் நோட்டுப் புத்தகங்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இதிலிருந்தே நோட்டுப் புத்தகங்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நவீனமான முறையில் நோட்டுப் புத்தகங்களை தயாரிக்கிற நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமெனில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சென்னை பாரிஸில் உள்ள துளசிராம் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கண்ணாவிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நோட்டுப் புத்தகங்கள் யார் யாருக்கு தேவைப்படுகிறது என்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை. நோட்டுப் புத்தகம் இல்லாத வீடே இல்லை என்று கூட  சொல்லலாம். எதுவும் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களைப் போல எனக்கும் ஒரு நோட்டுப் புத்தகம் வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடிக்கிற குழந்தைகளை நாம் பார்க்க முடியும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைப் போல் நோட்டுப் புத்தகமும் மிகவும் பிடித்தமான விஷயம். பாடங்களை மட்டுமில்லாமல் கதை, கவிதை, நினைவுகள், நண்பர்கள், உறவினர்களின் போன் நம்பர்கள், வாழ்க்கையில் நடக்கின்ற அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் நோட்டுப் புத்தகம் இன்றியமை யாததாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்