டிரேடர்களே உஷார் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆப்ஷன்ல அள் ளலாம் வாங்க!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“ஒரு லட்சம் ரூபாய்  முதலீடு பண்ணுங்கள். மாதம் ஒரு லட்சம் ரூபாய் லாபம். வாங்குங்கள் எங்கள் ஆப்ஷன் டிப்ஸ்.”

நான்கு நாட்களாக தொடர்ந்து தனக்கு வரும் இந்த எஸ்எம்எஸ் செய்தியை, திரும்பவும் படித்து பார்த்தார் கேசவமூர்த்தி. போன் பண்ணலாமா, வேண்டாமா? மனசுக்குள் அவருக்கு விவாதம் ஓடிக்கொண்டே இருந்தது.

கேசவமூர்த்தி ஓர் அரசு ஊழியர். தன் மனைவி பெயரில் ஒரு டிரேடிங் அக்கவுன்ட்டை ஆரம்பித்து டிரேட் பண்ணி வருகிறார். வருஷத்துக்கு மூன்று லட்சம் வீதம், கடந்த 5 வருடங்களில் சுமார் ரூ.15 லட்சம் நஷ்டம். 

முறையான பயிற்சி இல்லாமல் டிரேடிங்கை திரும்பத் திரும்ப பண்ணவே, நஷ்டம் கூடிக் கொண்டே போனது. கையில் இருந்த எல்லா சேமிப்பும் போனது.  இவர் டிரேடிங்கில் இவ்வளவு நஷ்டம் அடைய இவருடைய நண்பர் தணிகாசலமும் முக்கிய காரணம். 
 
தணிகாசலம் சந்தையில் வியாபாரம் செய்வதில் கில்லாடி என்று நினைத்துக்கொண்டு இருப்பவர். எல்லோரிடமும் பேசும்போது அதை நிரூபிக்க அத்தனை முயற்சியையும் எடுப்பார். அதில் அசந்து போய் பலிக்கடாவனாவர்தான் கேசவமூர்த்தி. கிட்டத்தட்ட தணிகாசலத்தை தன் குருவாகவே பார்க்க ஆரம்பித்தார்.
தணிகாசலம் அவ்வப்போது இதை வாங்கு, அதை வித்துடு என்று சொல்லும்போதெல்லாம் ஏன் எதுக்குன்னு கேட்காமல்  அப்படியே செய்வார் கேசவமூர்த்தி. அப்புறம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரிய நஷ்டம் வந்திருக்கும். கேசவமூர்த்தி, ‘‘என்ன நண்பா இப்படி பண்ணிட்டியே...’’ என்று கேட்டால், தணிகாசலம் அழ ஆரம்பித்து விடுவார்.

“அடடா... கேசவா... என்னாலதான் உனக்கு இப்படி ஆச்சி.”

அவர் அழுவதைப் பார்த்தால், கேசவனுக்கு நெஞ்சு பொறுக்காது. ‘‘பரவாயில்லை, விடு. போனது போச்சி. இப்ப என்ன செய்ய முடியும்?” என்பார்.

“இல்ல கேசவா. என்னால தானே உனக்கு நஷ்டம். இதை எப்படியாவது சரி பண்ணனும். நான் எப்படியாவது சரி பண்ணிடுவேன் கேசவா’’ என்றுதான் இன்றுவரை தணிகாசலம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், கடந்த ஐந்து வருடத்தில் ரூ.15 லட்சத்தை இழந்ததுதான் மிச்சம். இனி டிரேடிங் செய்வதையே விட்டு விடலாம் என முடிவெடுத்து சில மாதங்களுக்கு ஷேர் மார்க்கெட் ஆபீஸ் பக்கமே வராமல் இருந்தார் கேசவமூர்த்தி. அப்படி விரதம் இருந்தபோதுதான் இந்த எஸ்எம்எஸ் வந்தது.
ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு லட்சம் லாபமா! ஆஹா, ஐந்து வருடத்தில விட்டதை, ஒரு வருஷத்திலேயே எடுத்திடலாமே! கேசவமூர்த்திக்கு மனதில் லேசாக ஒரு அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. ஆஸ்தான ஆலோசகர் தணிகாசலத்திடம் விவரத்தைச் சொன்னார்.

“கேசவா, ஃபர்ஸ்ட் கிளாஸ் வாய்ப்பு. இவங்க ஆப்ஷன் டிப்ஸ் கொடுக்கிறதில கில்லாடிங்க. அதுவும் எக்ஸ்பைரி கிட்டதான் கால் கொடுப்பாங்க. விலை அப்ப ரொம்ப சீப்பா இருக்கும். எக்ஸ்பைரிக்கு இரண்டு நாள் இருக்கும்போது கொடுப்பாங்க. இரண்டு நாள்ல பணத்தை அள்ளிடலாம்” என்று அவரும் சொல்ல கேசவமூர்த்திக்கு புதிய தைரியமும் நம்பிக்கையும் வந்துவிட்டது.

“ஆனா, எனக்கு ஆப்ஷன் பத்தி ஒண்ணும் தெரியாதே!’’ என்று பயந்த கேசவமூர்த்தியிடம், ‘‘பயப்படாதே, நான் இருக்கேன் இல்லே. ஆனா, இவங்க டிப்ஸ் கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு மாசத்துக்கு 25,000 ரூபாய் கேப்பாங்க. அதுக்கப்புறம் அவங்க சொல்றபடிதான் நீ வாங்கணும், விற்கணும்.”

“அப்படின்னா?”

“அவங்க எதில வாங்க சொல்றாங்களோ அதில, அவங்க சொல்ற அளவுக்கு லாட் எடுக்கணும். எக்ஸ்பைரி அப்போ இரண்டு, மூணு டிப்ஸ் வரும்.”

“ஆனா, தணிகை இப்ப எங்கிட்ட எந்தக் காசும் இல்லையே. எல்லாத்தையுமே நான் இழந்துட்டேனே.”

“ஒண்ணு பண்ணலாம்... எனக்கு தெரிஞ்ச ஒரு ஃபைனான்ஷியர் வெறும் போஸ்ட் டேட் செக்கை இன்ஸ்டால்மென்டா வாங்கிட்டு பணம் தருவார்.  அதுக்கு வேணா நான் ஏற்பாடு பண்றேன்.”

தணிகாசலம் பேச்சைக் கேட்டு,  கேசவமூர்த்தி 1.25 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். டிப்ஸ்காரர்களுக்கு ரூ.25,000 கட்டினார். ‘கடவுளே, இந்த டிப்ஸ் வச்சி என்னோட நஷ்ட மான ரூ.15 லட்சத்தை எடுத்துக் கொடுத்துடு’ என்று வேண்டினார்.

டிப்ஸ்சுக்கு பணம் கட்டிய உடனே ஒரு டிப்ஸ்  வந்தது. செயில் 50 ஸ்டிரைக்ல, கால் ஆப்ஷன் வாங்குங்க. விலை ரூ.1 லாட் 12,000. மொத்தம் 4 லாட் வாங்குங்க. டார்கெட் ரூ.3.

கேசவமூர்த்தி உடனே தணிகாசலத்துக்கு போன் அடிச்சார். 

“தணிகை, பணம் கட்டுன உடனே டிப்ஸ் வந்துடுச்சு. ஆனா, எனக்கு எப்படி வாங்குறது, இதுல லாபம் வருமா, நஷ்டம் வருமா என்று தெரியலயே” என்று பதறினார்.

“பதறாதே கேசவா. செயில் கால் ஆப்ஷன் வாங்கிறப்ப, முதல்ல எவ்வளவு லாட் சைஸ்னு தெரியணும். அது எவ்வளவுனா 12,000. அப்படின்னா, ஒரு லாட்டுக்கு 12,000 செயில் வாங்கறதா அர்த்தம்.”

“அதுக்கு  ஏகப்பட்ட பணம் வேணுமே?”

“அதான் இல்ல. செலவு பண்ணப் போறது, ஒரு செயிலுக்கு ரூ.1 மட்டுமே. அப்படின்னா, ஒரு லாட்டுக்கு ரூ.12,000 மட்டும்தான் செலவு பண்ணப் போறே.”

“அவங்க 4 லாட்டு வாங்க சொல்றாங்களே!”

“ஆமா, நாலு லாட்டு வாங்கினா, நாம 12000 X 4 = 48,000 யூனிட் வாங்குறோம்.”

“அப்ப, நான் ரூ.48,000 கட்டணும். டார்கெட் ரூ.3 அப்படின்றாங்களே..”

“ஆமா கேசவா. அது டார்கெட் 3-ஐ தொட்டா நமக்கு லாபம்.”

“எவ்வளவு லாபம்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்