கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

ஜெ.சரவணன்

ங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தது மெட்டல் மற்றும் ஆயில் கமாடிட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் தங்கம் விலை நிலவரம் குறித்து இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.

தங்கம்!

‘‘கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை உயர்ந்து வர்த்தகமானது.கடந்த வியாழன் அன்று 28 மாத உச்சத்தை எட்டியது. கடந்த ஆறு மாதங்களில்  மட்டும் விலை 29% உயர்ந்தது. 

ஏழு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்து உள்ளதும், அமெரிக்காவில் மாதாந்திர வேலை நிலவரம் குறித்த தகவல்கள் வெளிவர இருப்பதும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம். 

பிரெக்ஸிட் முடிவுக்குப் பிறகு டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 12% குறைந்தது. இந்த நிலையில் வட்டி விகிதக் குறைப்பு பாசிட்டிவாக பார்க்கப்படு கிறது. இதனால் வியாழன் அன்று அதிகபட்சமாக அவுன்ஸ் தங்கம் 1,365 டாலருக்கு உயர்ந்தது.

இந்திய நிலவரப்படி, தங்கம் விலை உயர்வு ரூ.32,050 வரை போக வாய்ப் புள்ளது. பங்குச் சந்தைக்கு ஆதரவான செய்திகள் ஏதும் வந்தால் தங்கம் விலை ரூ.31,200 - 31,050 வரை இறங்க வாய்ப்புள்ளது’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்