ஜிஎஸ்டியினால் மக்கள் பாதிப்படையக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவைக்கான வரி (GST) திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது. ஜிஎஸ்டி-யினால் பொருட்களின் விலை குறையும்; வர்த்தக நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அரசின் மறைமுக வரி வருமானம் உயரும் என பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் அதே அளவுக்கு நெகட்டிவ்-ஆன விளைவுகளும் ஏற்பட நிறையவே வாய்ப்புகள் உண்டு.

ஜிஎஸ்டி வந்தபின் சிறு நிறுவனங்கள் அனைத்தும் வரி நிர்வாகத்துக்கு உட்படுவதால், செலவு அதிகரித்து, லாபம் குறையும். ஜிஎஸ்டியிலிருந்து சிறிய நிறுவனங்களுக்கு ஓரளவு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும் சிலபல பாதிப்புகளுக்கு அந்த நிறுவனங்கள் உள்ளாவதை மத்திய அரசாங்கம் எப்படி தடுக்கப் போகிறது?

மேலும், ஜிஎஸ்டி வரி 18 முதல் 20% வரை இருந்தால் பணவீக்கம் ஏற்படாது என்று சொல்லி இருக்கிறார் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன். 18 சதவிகிதத்துக்கு மேல் வரி விதிக்கக் கூடாது  என்கிற நிபந்தனையின் அடிப்படையிலேயே இதனை சட்டமாக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதே சமயம், பெரும்பான்மையான மாநிலங்கள் 20 சதவிகிதத்துக்கு மேல் வரி இருக்க வேண்டும் என கூறியுள்ளன. 18 சதவிகிதத்துக்கு மேல் வரி விதிக்கப்படும் பட்சத்தில் விலைவாசி நிச்சயம் உயரும். ஹோட்டல் செலவு, தொலைபேசிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரிமீயம், போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை உயரும். இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் மத்திய அரசாங்கம் எப்படி காக்கப் போகிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்