மியூச்சுவல் ஃபண்ட்... யூனிட்டுகளை விற்றால் எப்போது பணம் கிடைக்கும்?

கேள்வி-பதில்

? மியூச்சுவல் ஃபண்டில் யூனிட்டுகளை விற்றால் எப்போது பணம் கிடைக்கும்?

சண்முகம்,

விஜய்பாபு, நிதி ஆலோசகர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கோவை.

“ஈக்விட்டி ஃபண்டுகளில் 3 வேலை நாட்களிலும், கடன் ஃபண்டு களில் 2 வேலை நாட்களிலும், லிக்விட் ஃபண்டுகளில் 1 வேலை நாளிலும் பணம் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.”

? வங்கியில் கார் கடன் வாங்கினால் தேய்மானம் வகையில் ஆண்டுக்கு 10- 15% வரை ஆகும் செலவுத் தொகை வரி சேமிப்பின் மூலம் திரும்பக் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், வங்கியிலோ அந்த விதமான வருமான வரிச் சேமிப்பு பிசினஸ் செய்பவர் களுக்குத்தான் கிடைக்கும்; மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்காது என்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்?

தியாகராஜன்,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

“உங்கள் வங்கியில் கூறியதுபோல் சம்பளதாரர்களின் கார் மீது தேய்மானம் அனுமதிக்கப்படமாட்டாது. வணிக மேம்பாட்டுக்காக  பயன்படுத்தப் படுவதால் வணிகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்கள் மீது தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது. மாறாக, சம்பளம் பெறுபவர்கள் தங்களுடைய சுய தேவைக்காக உபயோகிப்பதால் அத்தகைய சலுகை தரப்படுவதில்லை.”

? கமாடிட்டி வர்த்தகத்தில் புரோக்கரேஜ் கட்டணம் மற்றும் வரிகள் புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடுமா?

சிவக்குமார்,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்

“ஒவ்வொரு முறை நாம் வியாபாரம் செய்யும்போதும், நம்மிடம் இருந்து எடுக்கப்படுகிற வரிகள் என்பது எல்லா புரோக்கர்களிடமும் சமமாகவே இருக்கும். ஆனால், புரோக்கரேஜ் கட்டணம் என்பது போட்டியின் அடிப்படையில் புரோக்கர்கள் குறைக்க வாய்ப்புள்ளது. சந்தையில் தற்போது அதிக அளவு வால்யூம் பண்ணும் வாடிக்கையாளர்களுக்கு, புரோக்கர்கள் புரோக்கரேஜ் கட்டணத்தைக் குறைப்பது வழக்கம். இப்போது போட்டி அதிகமாக இருப்பதால், புரோக்கர்கள் வகைவகையான திட்டங்களை தீட்டி வாடிக்கையாளர் களைக் கவர முயற்சிக்கின்றனர். உதாரணமாக, அதிக வியாபாரம் செய்யச் செய்ய புரோக்கரேஜ் கட்டண விகிதத்தைக் குறைப்பது, ஒரு லாட்டுக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை நிர்ணயம் செய்வது, மாதத்துக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகையை (ஃபிக்ஸட் புரோக்கரேஜ்) நிர்ணயம் செய்வது போன்றவை. இந்த வழக்கம் கமாடிட்டி வர்த்தகம் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் பின்பற்றப்படுகிறது.”

? என்எஸ்இ-ல் வாங்கிய பங்குகளை பிஎஸ்இ மூலம் விற்க முடியுமா?

ஜான்சன்,

எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர்,சேலம்.

“எந்த பங்குச் சந்தையில் பங்கு வாங்கினாலும் மற்றொரு பங்குச் சந்தையில் விற்கலாம். நீங்கள் விற்க நினைக்கும் எக்ஸ்சேஞ்சில் உங்கள் பங்குத் தரகர் பதிவு செய்திருக்க  வேண்டும் என்பது முக்கியம்’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்