வந்தாச்சு ஜிஎஸ்டி... மக்களுக்கு என்ன சாதகம்?

ஜெ.சரவணன்

டந்த எட்டு ஆண்டுகளாக இழுபறியில் இருந்துவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) திருத்த மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறிவிட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்று உணர்த்தப்படும் ஜிஎஸ்டி 2017-ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில், இந்த வரி விதிப்பினால் யாருக்கு என்ன லாபம், குறிப்பாக மக்களுக்கு என்ன லாபம் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. ஜிஎஸ்டி யின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு எளிதில் விடை காணலாம்.

இந்தியாவில் தற்போதைய வரி விதிப்புகளைப் பொறுத்த வரை நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளன. (பார்க்க  பக் 12-ல் உள்ள படம்) இதில் மறைமுக வரியில் மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரியை வசூலிக்கின்றன. ஜிஎஸ்டி வந்தபின் நேரடி வரியில் எந்த மாற்றமும் இல்லை. மறைமுக வரியில் தற்போதுள்ள அனைத்து வரிகளும் ஒரே வரியாக ஜிஎஸ்டியின் கீழ் வந்துவிடும்.

வரிகளை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் இதன் மூலம் விலக்கப்பட்டு வரி நிர்வாகம் எளிதாக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு என்பதால் எங்கு வேண்டு மானாலும் அவர்களால் தங்கள் தொழிற்சாலையை நிறுவ முடியும். எங்கிருந்து வேண்டு மானாலும் அவர்களுக்கு தேவை யான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். வரி குறித்த பயமோ, தயக்கமோ இருக்காது. இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளம் பெருகும். இத னால் இந்தியப் பொருளாதாரமும் உயரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்