மதுரை ரியல் எஸ்டேட் கள நிலவரம்

‘‘மனை வாங்கவே மக்கள் யோசிக்கிறார்கள்!’’ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்

மிழகத்தில் இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம். பத்திரப் பதிவு அலுவலகங்களில் பணி புரிபவர்கள், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், பில்டர்கள், பொறியாளர் என பல தரப்பினரிடம் வீடு, மனைகளின் விலை நிலவரங்களை விசாரித்தோம். அவர்களிடமிருந்து பெற்ற தகவல்கள்...

தூங்கா நகரான மதுரையில் கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. சென்னை, கோவையுடன் ஒப்பிடுகையில், மதுரையில் நகரப் பரவலாக்கம் என்பது மிக மந்தமாகவே உள்ளது. மாநகராட்சி விரிவாக்கத் தில் ஆனையூர், உத்தங்குடி, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் இணைக்கப்பட்டாலும் அவையாவும் தனித்தனி ஊராகவே இன்னும் பிரிந்து கிடக்கிறது. அந்தப் பகுதிகளில் நல்ல சாலை வசதிகளோ, பாதாளச் சாக்கடை வசதிகள், குடிநீர் விநியோகம் பரவலாக்கப் படவில்லை. அதனால் மக்கள் அங்கு மனைகள் வாங்க யோசிக்கிறார்கள்.

மதுரை மக்களே வேலை தேடி வெளியூர் செல்லும் சூழலில் வீட்டு மனை விற்பனை என்பது அரிதாகிவிட்டது. வட மாநில வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த மதுரையைத் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதால், அவர் களால் சில அடுக்குமாடிகள் நிரம்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்