திருச்சி ரியல் எஸ்டேட் கள நிலவரம்

‘‘புறநகர்களில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்!”ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்

மிழகத்தில் இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம். பத்திரப் பதிவு அலுவலகங்களில் பணி புரிபவர்கள், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், பில்டர்கள், பொறியாளர் என பல தரப்பினரிடம்  வீடு, மனைகளின் விலை நிலவரங்களை விசாரித் தோம். அவர்களிடமிருந்து பெற்ற தகவல்கள்...

மிழகத்தின் மையப்பகுதி என்பதே திருச்சியின் பெருமையை பறைசாற்றும். திருச்சி மாநகராட்சியின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறித்து சொன்னார் இங்குள்ள தில்லை நகரை சேர்ந்த பில்டர் அமர்நாத்.

“திருச்சியில் ஒட்டுமொத்தமாக ரியல் எஸ்டேட் குறைந்திருக்கிறது. ஆனால் வீடுகளை வாங்கும் மக்களின் ரசனையும், வாழ்க்கை முறையும் மாறி இருப்பதால், திருச்சியில் சீராக அடுக்குமாடிக்  கலாச்சாரம் பரவி வருகிறது. இது திருச்சி முழுக்க இன்னும் பரவவில்லை என்றாலும் முக்கியமான பகுதிகளில் அடுக்குமாடிக் கலாச்சாரம் வேறூன்றத் தொடங்கிவிட்டது. 

காரணம், இன்றைய தேதியில் யாருக்கும் பொறுமையாக நிலத்தை வாங்கி மேலும் செலவழித்து வீடுகளைக் கட்ட நேரமில்லை; பொறுமையும் இல்லை. அதோடு அபார்ட் மென்ட் என்றால் குடிநீர், இதர பயன்பாட்டுக்கான தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் வசதி, வாகன பார்க்கிங் வசதி என்று சகலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டு வீடுகளைக் கட்டி தருகிறார்கள் என்பதால் திருச்சி யில் வீடு வாங்க விரும்பும் மக்கள் அடுக்குமாடியைத் தேர்வு செய்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்