ட்ரம்ப் Vs ஹிலரி - யார் அதிபரானால் இந்தியாவுக்கு நன்மை?

ச.ஸ்ரீராம்

மெரிக்க அதிபர் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் ட்ரம்ப் அல்லது ஹிலரி - இந்த இருவரில் ஒருவர்தான் அமெரிக்க அதிபராகப் போகிறார்கள். இவர்களில் யார் அதிபரானாலும் அமெரிக்காவுக்கு என்ன நன்மை என்பதைவிட இவர்களில் யார் அதிபரானால் பொருளாதார ரீதியாக இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

ட்ரம்ப் வந்தால்..!

டொனால்ட் ட்ரம்ப் மிகப் பெரிய பிசினஸ்மேன். இதுதான் அவரது பிரதான அடையாளம். அவரது பிரசாரங்களில் முக்கிய இடம் பிடித்த மூன்று வார்த்தைகளுமே - வெற்றி, ஒப்பந்தங்கள், மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவது - வியாபாரத்தை மையமாக கொண்டவைதான். இவற்றின் மூலம் அமெரிக்க வர்த்தகத்தை பொருளாதார ரீதியாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக ஒரு விஷயத்தை கவனத்தில் கொண்டுள்ளார். முன்பு அமெரிக்காவின் பொருட்கள் உலக நாடுகள் முழுவதும் நிறைந்திருந்தது. இன்று அமெரிக்கா, உலக நாடுகளின் பொருட்களால் நிறைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவே ட்ரம்ப் விரும்புகிறார். அது மட்டுமின்றி, சீனத் தயாரிப்பு களின் தாக்கம் அமெரிக்கச் சந்தைகளில் இருப்பதை ட்ரம்ப் அறவே விரும்பவில்லை. அதே போல், பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களும், இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பாகிஸ்தானு டனான அமெரிக்காவின் உறவை பாதிக்கும்.

ஆனால், இந்திய ஐடி பிசினஸ் அமெரிக்காவையே பெரும் அளவில் நம்பி இருக்கிறது. இந்தியாவுக்கு ஐடி வேலைகள் வழங்கப்படுவதை எதிர்க்கிறார் ட்ரம்ப். அவர் அதிபராகி, சொன்னபடி செய்துவிட்டால், இந்தியாவின் ஐடி தொழில் படுத்துவிட வாய்ப்பு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்