நாணயம் லைப்ரரி: மனோதிடத்தை வளர்க்கும் மந்திரங்கள்!

புத்தகத்தின் பெயர்     : எக்சிக்யூட்டிவ் டப்னெஸ் (Executive Toughness)

ஆசிரியர்     : டாக்டர் ஜாசன் செல்க்  (Jason Selk)

பதிப்பாளர்     : McGraw-Hill Education

திடமான மனதைக் கொண்டவர்களே எதிலும் அதிக உயரத்துக்குச் செல்கின்றனர். நீங்களும் பெரிய உயரங்களை தொடலாம். அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்..? அதற்காக மூளையை பயிற்றுவிக்க என்ன செய்ய வேண்டும்..? டாக்டர் ஜாசன் செல்க் எழுதிய ‘எக்சிக்யூட்டிவ் டப்னெஸ்’ என்னும்  புத்தகம் அதற்கான சில வழிகளை சொல்லித் தருகிறது.

‘மனோதிடம் என்பது மூளையை அதற்கான வழி முறைகளில் பயிற்றுவிப்பதன் மூலமே வருகிறது. மனிதனை அவன் எத்தனை வெற்றி, தோல்விகளை சந்தித்திருக் கிறான் என்பதைக்கொண்டு எடை போட்டுப் பார்க்காதே. அந்தச் செயல்களில் ஈடுபடும் போது எந்தளவுக்கு  முயற்சிகளைச் செய்தான் என்பதை வைத்தே எடை போட்டுப் பார்’ என எனது கல்லூரி கூடைப்பந்து பயிற்சியாளர் ஒருவர் திரும்பத் திரும்ப சொல்லிவந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன்.  நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் புரிந்தது அவர் சொன்னதின் அர்த்தம். ஒருவரின் முயற்சியை அந்தக் கோணத்தில் எடை போடும்போது மட்டுமே அவருடைய மனம் எவ்வளவு உறுதியாக இருந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.

‘‘மனோதிடம் என்றால் என்ன? ஒரு செயலில் நாம் ஈடுபடும்போது எந்தவிதத்திலும் நம்முடைய உணர்ச்சிகள் மூளையை ஆக்கிரமிக்கவிடாமல் பார்த்துக் கொள்வதே மனோதி டம்.  இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்ப்போம்.

நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம். அதில் நம்முடைய முயற்சியையும், ஈடுபாட்டையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதேசமயம் முடிவின் மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. எனவே, நாம் கவலைப்படுவது என்பது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி இருக்கக்கூடாது.

ஆனால், இன்றைய வேகமான உலகில் நாம் முடிவைப் பற்றி மட்டுமே அதிகக் கவலை கொள் கிறோமே தவிர, அந்த முடிவுக்கு  நாம் செய்யும் முயற்சியைப் பற்றி பெரிதாகக் கவலைப்படுவது இல்லை. முடிவைப் பற்றி கவலைப்படாமல் எந்தவொரு செயலையும் விரைவாகச் செய்து முடிக்க நினைக்கலாமே தவிர, முடிவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே ஒரு செயலை அவசரமாக முடிக்க நினைக்கக் கூடாது’’ என்கிறார் ஆசிரியர்.

 எந்த ஒரு விஷயத்திலும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மனோதிடம் மட்டுமே என்று சொல்லும் ஆசிரியர் எந்த ஒரு விஷயத்தையும் சீரிய கவனத்துடன் செய்து முடிக்க நினைப்பதே சிறந்ததொரு மனோதிடம் ஆகும். அதிலும் கஷ்டங்கள் அதிகமாக வரவர இந்த மனோதிடத்தையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்