கேட்ஜெட்ஸ்

லெனோவோ ஐடியாபேட் Y700-15ISK (Lenovo Ideapad Y700-15ISK)

விலையைப் பற்றிக் கவலைப்படாமல், இளைஞர்கள் முதலீடு செய்வது கேமிங் லேப்டாப்பில்தான். அதனால் தான் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல், பெர்பாமன்ஸ் சிறப்பாக இருக்கும் லேப்டாப்களை நிறுவனங்களும் உருவாக்குகின்றன. 

இதற்கு முன்னர் 17 இன்ச்சில் Y700-17ISK என லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது லெனோவோ. தற்போது, 15.6 இன்ச்-க்கு அதே மாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். மெட்டல் பாடி டிஸ்பிளே என்பதால், கைரேகைகள் எளிதில் தெரியும்படி வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே, இதை சுத்தமாக வைத்து இருக்க, தனியாக கவர் ஏதாவது போட்டுக்கொள்வது சிறப்பாக இருக்கும். மேலும், தவறுதலாக கீழே விழுந்தாலும், எளிதில் உடைந்துவிடாதபடிக்கு  அமைத்திருப்பது சிறப்பான அம்சம். 

விண்டோஸ் 10 மென்பொருளில் இயங்குகிறது இந்த ஐடியாபேட், 16 ஜிபி ரேம், 1 டிபி ஹார்ட் டிஸ்க் என கேமிங்குக்கு ஏற்ற வகையில் இதன் மெமரி தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 2 USB 3.0, 1 USB 2.0, 1 HDMI, 1 4*1 மீடியா கார்டு ரீடர், டிவிடி ரைட்டர் என போர்ட்டுகளும் அட்டகாசமாக இருக்கிறது. 2.1 JBL ஸ்பீக்கரும், வூஃபரும் அதிரடி இசைக்காக தரப்பட்டு இருக்கிறது.கேமிங்குக்காக 4 ஜிபி Nvidia GeForce GTX 960M GPU கிராபிக்ஸ் கார்டு கொடுத்திருக்கிறார்கள். இதன் ஃபிரன்ட் கேமராவில், 1080p வீடியோவும் எடுக்க முடிகிறது    

மடியில் வைத்து பயன்படுத்தும்போது சூடாகும் என்பதால், அதற்கேற்ப கீழ் பகுதியில் கூலர்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், பேக்லைட் விஷயங்களுக்கு, சிவப்பு நிறத்தில் லைட்டுகள் தரப்பட்டு இருக்கிறது. இதன் ரேமை, அப்கிரேடு செய்ய முடியாது என்பதுதான் இதில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்னை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்