வேலை பறிபோகும் அபாயம்!

ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்சோ.கார்த்திகேயன்

ம் நாட்டில் 2014-ம் ஆண்டில் ஜவுளி, ஐடி, தோல், ஆபரண நகைகள், உலோகத் தொழில், ஆட்டோமொபைல், போக்குவரத்து மற்றும் கைத்தறி என அமைப்பு சார்ந்த எட்டு துறைகளில் இருந்து 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், 2015-ல் ஏறக்குறைய 68% குறைந்து, 1,30,000 புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் ஐவுளித் துறையில் அதிகபட்சமாக வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்பு கள் உருவாகி உள்ளது.

ஐடி/பிபிஓ தொழிலைப் பொறுத்தவரை, கடந்த 2013-ல் 1,09,000 பேரும் 2014-ல் 1,93,000 பேரும் வேலைக்கு எடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால், 2015-ல் 76,000 பேர் மட்டுமே வேலைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து பல்வேறு துறை நிபுணர்களுடன் பேசினோம். முதலில் நாஸ்காம் (பெங்களூரு) துணைத் தலைவர் விஸ்வநாதனிடம் பேசினோம்.

‘‘ஐடியில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது!’’

“ஐடி துறையைப் பொறுத்த வரை, வேலை இழப்பு என்பது பெரிய அளவில் இல்லை. இந்தியாவில், ஐடி துறையில் இதற்குமுன் 27 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். தற்போது 31 லட்சம் பணியாளர் களாக அதிகரித்துள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 லட்சம் தொழிலாளர்கள் என புதிதாக சேர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

ஐடி துறையில் பணியாளர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதற்குமுன் ஐடி துறையில் சி++, ஜாவா போன்ற புரோகிராமிங் தெரிந்த திறமையானவர்கள் மட்டுமே தேவையாக இருந்தனர். ஆனால், இப்போது கிளவுட், மொபைலிட்டி, அனாலிட்டிக்ஸ் தெரிந்தவர்களுக்கு ஐடி துறையில் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. தற்போது ஐடி நிறுவனங்கள் பணியாளர்களின் புரோகிராமிங் ஸ்கில் தவிர, கூடுதலாக அவர் களுடைய திறமையையும் மேம்படுத்தி வருகின்றன.

ஐடி துறையில் நேரடியாக ஒருவருக்கு வேலை கிடைக்கிறது என்றால், கேட்டரீங், செக்யூரிட்டி, கேன்டீன் சர்வீஸ் என மறைமுகமாக நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தமிழகத்தில் ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் கிட்டதட்ட 4.50 லட்சம் ஐடி பணியாளர்கள் உள்ளனர். வரும் ஆண்டுகளிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஐடி துறையில் திறமையான மாணவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்