30 வயதுக்கு முன்..!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

ய்வுக்காலம், குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும்  திருமணம், சொந்த வீடு, காப்பீடு  உள்பட வாழ்க்கையில் முக்கியமான நான்கு அல்லது ஐந்து விஷயங்களுக்கு 30 வயதுக்கு முன்னதாகவோ அல்லது வேலைக்குச் சேர்ந்தவுடனேயோ திட்டமிட்டு முதலீடு செய்யத் தொடங்கிவிட வேண்டும். அப்படிச் செய்தால் பணச் சிக்கல் இல்லாத நிம்மதியான சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும். ‘முப்பது வயசுல  ஓய்வுக் காலம் பத்தி ஏன் சார் நினைக்கணும்?’ என்று பலரும் கேட்கிறார்கள். 40 வயது கடந்தபிறகு செலவுகள் வந்து அச்சுறுத்தும்போது பதறிப் போய் பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். மிகச் சிலர்தான் சரியான வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றும்  ராம்குமார் தியாகராஜனுக்கு 31 வயதுதான். இந்தத் தருணத்திலேயே ஃபைனான்ஷியல் பிளான் கேட்டு வந்திருக்கிறார்.அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்...

“எனக்கு சொந்த ஊர் சேலம். பெங்களூருவில் பணியாற்றுவதால், என் மனைவியுடன் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். என் மனைவி நாகநந்தினி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். பிடித்தங்கள் போக மாதம் ரூ.68,000 சம்பளம் வாங்குகிறேன்.

எனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி என் அலுவலகத்தில் ரூ.5 லட்சத்துக்கு கொடுத்துள்ளதால், அப்பா, அம்மாவுக்கு மட்டும் மெடிக்ளைய்ம் வருட பிரீமியம் ரூ.20,000 ஆகிறது. நான் இன்னும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை.

2022-க்குள் சேலத்தில் ரூ.50 லட்சத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும். மனை இனிதான் வாங்க வேண்டும். அதற்காக ரூ.3 லட்சம் வைத்துள்ளேன். அடுத்த ஒரு வருடத்தில் கார் லோனும், சென்னை ஒரகடத்தில் நான் ஏற்கெனவே வாங்கியுள்ள காலி மனைக்கான  லோனும் முடிந்துவிடும் என்பதால் எனக்கு இப்போது மீதமாகும் ரூ.13,169 தொகையுடன் ரூ.10,398  கூடுதலாக சேரக்கூடும்” என்றவர் தனது வரவு செலவு, முதலீட்டு விவரங்களை அனுப்பி வைத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்