நிஃப்டி எதிர்பார்ப்புகள்: நிஃப்டி எதிர்பார்ப்புகள்: சந்தையின் அடுத்த மூவ்... ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் தீர்மானிக்கும்!

டிரேடர்களே உஷார்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல் டிரேடர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் டெக்னிக்கலாக 8515 லெவலை உடைத்து வால்யூமுடன் கீழே இறங்கினால் 8275 லெவல்கள் வரையில் சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும் செய்தி கள் பாசிட்டிவ்வாக இருந்தால் தற்போதைக்கு இறக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

8518 என்ற குறைந்தபட்ச லெவலையும் 8711 என்ற அதிகபட்ச லெவலையும் அடைந்தது நிஃப்டி. இரண்டு நாள் சுமாரான இறக்கத்திலும், ஒரு நாள் கணிசமான இறக்கத் திலும் ஒரு நாள் சிறியதொரு ஏற்றத்திலும் ஒரு நாள் கணிசமானதொரு ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 44 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் வெளிவர இருக் கின்றது. இந்த முடிவுகளும் செய்திகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.

டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லை. 8515 – 8275 என்ற சப்போர்ட்களைக் கொண்டே சந்தை இருக்கிறது. வெள்ளியன்று இறுதியில் டெக்னிக்கலாக சந்தை ஸ்ட்ராங் கான நிலைமையிலேயே இருக் கிறது. செய்திகள் மற்றும் நிகழ்வு களின் மீது கண் வைத்தே வியா பாரம் செய்யவேண்டியிருக்கும்.

வால்யூம் குறைய ஆரம்பித்தால் வியாபாரத்தினை நிறுத்திக் கொள்வது நல்லது. ஷார்ட் சைட் வியாபாரத்தினையும் ஓவர்நைட் வியாபாரத்தினையும் தற் போதைக்கு தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் கட்டாயமாக ஓவர்நைட் பொசிஷன்களை தவிர்க்கவும். கேப் ஓப்பனிங் மற்றும் நாளின் நடுவே திடீர் இறக்கங்கள் வந்தால் நிதானியுங் கள். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 05-08-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்